தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 3-ஆவது இடத்தை அடைந்தது. 

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள், தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி தீவிரம். போர்க்கால வேகத்தில் செயல்பட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு. 

கலக்கத்தை ஏற்படுத்தும் சென்னை ஃபீனிக்ஸ் மால்: தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்கள்!

 

 image

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி இன்று தொடக்கம். கடைகளில் கூட்டத்தை தவிர்க்க வீட்டிற்கே வந்து டோக்கன் தரப்படும் என அமைச்சர் காமராஜ்
அறிவிப்பு. 

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய சுமார் ஒன்றே கால் லட்சம் பேர் கைது. தடையை மீறி வாகனங்களை ஓட்டியதற்காக 40 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டதாக காவல் துறை தகவல். 

 ரூ.1000 மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் இன்று முதல் விநியோகம்

image

சிபிஎஸ்இ 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு. 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முந்தைய தேர்வின் அடிப்படையில் தேர்ச்சி. 

உலகெங்கும் கொரோனா உயிரிழப்புகள் 47 ஆயிரத்தை கடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டி அதிவேகமாக அதிகரிப்பு.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.