கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 1-ம் தேதி மாலை நிலவரப்படி கோவை மாவட்டத்தில், ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த ஒரே ஒருவருக்குத்தான் கொரோனா பாசிட்டிவாகியிருந்தது.

இ.எஸ்.ஐ மருத்துவமனை

அதேநேரத்தில், ஈரோட்டிலிருந்து பணிமாறுதல் பெற்ற ரயில்வே டாக்டர் குடும்பம், லண்டனிலிருந்து வந்த உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் என்று மொத்தம் 6 பேர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

ஆனால், நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 110 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், கோவை மாவட்டத்தில் மட்டும் 28 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் மாவட்டத்தில் கோவை முதல் இடத்தில் உள்ளது. இது கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை

டெல்லி நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 21, பொள்ளாச்சியைச் சேர்ந்த 6 மற்றும் ஏற்கெனவே கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த ரயில்வே டாக்டரின் கணவர் என 28 பேருக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, “டெல்லி மாநாட்டில் கோவை மாவட்டத்திலிருந்து 101 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில், 91 பேரை அடையாளம் கண்டுவிட்டோம். அதில், 71 பேருக்கு சோதனை செய்துள்ளோம். 41 பேருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. 27 பேருக்கு பாசிட்டிவாகியுள்ளது. இன்னும் ரிசல்ட்கள் வரவேண்டியுள்ளது. எனவே, எண்ணிக்கை அதிகமாகவும் வாய்ப்பிருக்கிறது.

ஆட்சியர் ராசாமணி

வெளிநாடு, வெளிமாநிலம் சென்றவர்களுக்குதான் கொரோனா பாசிட்டிவாகியிருக்கிறது. உள்ளூரைச் சேர்ந்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்து வருகிறோம். தடுப்பு நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டி வருகிறோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.