கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளான போக்குவரத்து வசதியை வர்த்தகர்களும், உற்பத்தியாளர்களும், மாநில அரசும் பயன்பெறும் வகையில் சேலம் ரயில்வே கோட்டத்திலிருந்து கோவை வழியாக டெல்லிக்கு சரக்கு ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் ரயில் நிலையம்

கொரோனா வைரஸ் பரவல் பிரச்னை நீடிக்கும் நிலையில், உணவு தானியங்கள், அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரி ஆகியவற்றை நாடு முழுவதும் துரிதமாக கொண்டு செல்லும் சேவையில் இந்திய ரயில்வே ஈடுபட்டு வருகிறது.

Also Read: `இது கொரோனாவை ஒழிக்காது.. ஆனா, புது நம்பிக்கை கொடுக்கும்!’ – கரூர் பெண்களின் புது முயற்சி

தற்போது, அதன் அடுத்தகட்ட சிறப்பம்சமாக, மருந்துகள், மருத்துவப் பொருள்கள், முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை வணிகர்கள், உற்பத்தியாளர்கள், மாநில அரசுகள் ஆகியவை பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்க வசதியாக, ரயில்வே நிர்வாகம் சிறப்பு சரக்கு வேகன்களை இயக்குகிறது.

கரூர் ரயில் நிலையம்

குறிப்பாக, சேலம் ரயில்வே கோட்டத்திலிருந்து கோவை- பட்டேல் நகர் (டெல்லி மண்டலம்)- கோவை, கோவை- ராஜ்கோட்- கோவை, கோவை – கோவை- சேலம் ஆகிய வழித்தடங்களில் சரக்கு வாகனங்களை இயக்க உள்ளது. எனவே, வர்த்தகர்களும், உற்பத்தியாளர்களும், மாநில அரசுகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான சரக்குகளை வெளி இடங்களுக்கு அனுப்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறுகையில்,“சேலம் கோட்டத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள வணிக ஆய்வாளர்களை தொடர்புகொண்டு, சரக்குகளை அனுப்பலாம். தற்போதுள்ள சரக்கு கட்டண அடிப்படையில் சரக்குகளை அனுப்பலாம். தனிநபர்கள் அல்லது குழுக்களாக இணைந்து பார்சல்களை அனுப்பலாம். எனினும் குறைந்தபட்சம் 15 பார்சல் வேகன்களில் சரக்குகள் அனுப்பப்பட வேண்டும். (ஒரு சரக்கு வேகனில் 23 டன் எடை கொண்ட சரக்குகளை ஏற்றலாம்). மேற்குறிப்பிட்ட வழித்தடங்கள் தவிர, வேறு இடங்களுக்கும் தேவைப்பட்டால் சரக்கு வேகன்கள் இயக்கப்படும். இதற்கான விசாரணைகள் மற்றும் முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன. உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தகர்கள், தனிநபர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த இக்கட்டான சூழலில் நாடு இருக்கும் நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் நாடு முழுக்க பாதுகாப்புடன் போய்ச் சேர வேண்டும். அதற்காக, இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

கரூர் ரயில் நிலையம்

இதுசம்பந்தமாக, சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ள வணிக ஆய்வாளர்கள் செல்போன் எண்கள்:

Interested parties may approach the Railway Parcel Offices for registration or may call Concerned Commercial inspector of region Coimbatore – 9003956955, Tiruppur – 9600956238, Erode – 9600956231, Salem – 9003956957, Nammakkal and Chinnasalem – 9003956956, Karur – 8056256965.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.