“கரூர் மாவட்டத்தில் ஊடங்கை கடைப்பிடிக்கும் மக்கள், அத்தியாவசிய பொருள்களான காய்கறி, மளிகைப் பொருள்கள் மற்றும் மருந்துகளை வாங்க வெளியில் வர வேண்டிய தேவையில்லை. செல்போனில் அழைத்தால் போதும், மருந்து, மளிகைப் பொருள்கள் உங்கள் வீடுதேடி வரும்” என்று கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

அன்பழகன் (கரூர் மாவட்ட ஆட்சியர்)

கொரோனா வைரஸ் பரவுவதால் 21 நாள்களுக்கு தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களை அத்தியாவசிய பொருள்கள் வாங்க மட்டும் வெளியே வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி எதற்கு வெளியே போகிறோம் என்று தெரியாமல், கொரோனா வைரஸின் வீரியம் புரியாமல் பலரும் வெளியில் சுற்றிக்கொண்டிருக்கின்றனர்.

அவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை கடும் முயற்சிகளை மேற்கொண்டாலும், பலரும் அதைக் கேட்காமல் வெளியில் சுற்றுவதைக் குறைக்காமல் இருக்கிறார்கள். அவர்களை வீட்டைவிட்டு வெளியே வராமல் செய்ய ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் ஒவ்வொரு முயற்சியை செயல்படுத்தி வருகிறது.

காய்கறி

அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்கவும், கூட்டத்தைக் குறைக்கும் வகையிலும் செல்போனில் அழைத்து கோரினால், வீடு தேடிச் சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Also Read: `ஊரடங்கு உத்தரவு; கிராம மக்களுக்கு 1 கிலோ காய்கறி!’ – நெகிழ வைத்த கரூர் இளைஞர்

இதுகுறித்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளின் கடைகள் பெயர், செல்லிடைப்பேசி எண்கள் என்ற அடிப்படையில் விவரம்: கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோர், கோவைச் சாலை, கரூர் – 8489943092, ஸ்ரீ கிருஷ்ணா டிபார்ட்மென்ட் ஸ்டோர், கோவைச் சாலை, கரூர் – 9486732555, ஸ்ரீ கிருஷ்ணா டிபார்ட்மென்ட் ஸ்டோர் சி4, திருச்சி சாலை, காந்திகிராமம், கரூர் – 7373774465, வாங்கலம்மன் டிபார்ட்மென்ட் ஸ்டோர் மில்கேட், தான்தோன்றிமலை, கரூர் – 9600808887, ரவி சூப்பர் மார்க்கெட், 279, ஜவஹர் பஜார், கரூர்- 9843039740, பாரதி ஸ்டோர், அண்ணா சாலை பேருந்து நிலையம் மேல்புறம், கரூர் – 9443658817, 8098091860 (வாட்ஸ்அப் ), தங்கராஜ் மளிகைக் கடை, 52, திரு.வி.க சாலை, கரூர் – 994703454, கணபதி டிபார்ட்மென்ட் ஸ்டோர், வெங்கமேடு – 7558139948, உதயம் டிபார்ட்மென்ட் ஸ்டோர் , வெங்கமேடு – 9952305257, கருவூர் சூப்பர் பஜார் , வெங்கமேடு – 7373716043, ஆப்பிள் சூப்பர் மார்க்கெட், செல்லாண்டிபாளையம், ராயனூர் – 9629345300, எஸ்கேடி டிபார்ட்மெண்ட் ஸ்டோர், சுக்காலியூர், காந்தி நகர், கரூர் – 9865679126, வேலன் டிபார்ட்மென்ட் ஸ்டோர், தீரன் நகர், ராயனூர் – 9629644614, சக்தி சரவணா டிபார்ட்மென்ட் ஸ்டோர், 43, அருணாசல நகர் விஸ்தரிப்பு, பசுபதிபாளையம் – 9486062225, சாந்தி டிபார்ட்மென்ட் ஸ்டோர், காந்திகிராமம் – 9940091640 ,

அன்பழகன் (கரூர் மாவட்ட ஆட்சியர்)

மருந்துக் கடைகளின் பெயர், செல்லிடப்பேசி எண்கள் விவரம்:

கரூர் பாவா மெடிக்கல்ஸ் – 8903694786, தமிழ்நாடு பார்மஸி – 9095588844, தமிழ்நாடு மெடிக்கல் – 9865703376, சூப்பர் மெடிக்கல் – 9843553572, காந்தி கிராமம் துளிர் பார்மஸி – 7598264931, வெங்கமேடு நந்தி மெடிக்கல் – 9965826665.

பொருள்கள் சப்ளை செய்யும் பணியாளர்கள், அவர்களின் செல்லிடைப்பேசி எண்கள் விவரம்:

டெலிவரி ஸ்டார் (போன் டெலிவரி மற்றும் ஆன்லைன் டெலிவரி) மளிகை, காய்கனிகள் மற்றும் கறிவகைகள் அனைத்துப் பகுதிகள்) – 979277850, 9677313668 (வாட்ஸ்அப்), கோபாலகிருஷ்ணன், (கரூர் நகரம் மற்றும் வெங்கமேடு மட்டும்) – 8870834300, ரவிக்குமார் – (தாந்தோணிமலை மட்டும்) – 9566988768.

குளித்தலை நகராட்சி- கடைகளின் பெயர், செல்லிடைப்பேசி எண்கள்:

ஜெயம் ஸ்டோர், கடைவீதி தெரு, கடம்பர் கோவில், குளித்தலை – 98659 38742, ஸ்ரீவெங்கடேசா மளிகை, பழைய டோல்கேட் தெரு, குளித்தலை – 99447 80887, 95851 28128, சுபான் மளிகை, பழைய டோல்கேட் தெரு, குளித்தலை – 98655 14056, 73732 99786, ஹமீதியா மளிகை, பேராளம்மன்கோவில் தெரு, குளித்தலை – 96884 41908. ரகுமான் ஸ்டோர், புதுகோர்ட் தெரு, குளித்தலை – 99442 06063, ஞானம் மளிகை, குளித்தலை – 99445 75852, பூம்புகார் ஸ்டோர், புது கோர்ட் தெரு, குளித்தலை – 94433 53306, ஹபீபா ஷாப்பிங் ஸ்டோர், பேராளம்மன்கோவில் தெரு, குளித்தலை – 99658 57655, எம்.பி.ஆர் மளிகை, ஆண்டாள் மெயின் ரோடு, குளித்தலை – 81484 09567, முத்து மளிகை, பழைய ஆஸ்பத்திரி ரோடு, குளித்தலை – 97915 95577, விஜய் மளிகை, பெரியார் நகர், குளித்தலை – 95430 90443, ஏ1 மளிகை, பழைய கோர்ட் தெரு, குளித்தலை – 99942 25600.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.