இந்தியாவில் 1,251 ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரித்திருக்கிறது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 32 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று ஒரேநாளில் புதிதாக 157 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

உலக அளவில் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,84,716 ஆக இருக்கிறது. அதேநேரம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,639 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 11,591 பேரும் ஸ்பெயினில் 7,716 பேரும் அமெரிக்காவில் 3,146 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
Also Read: கொரோனா பரிசோதனைக்கு இந்தியாவில்தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா..? #VikatanFactCheck