‘வலிமை’ அஜித்தின் அடுத்த ‘மங்காத்தா’ என இயக்குநர் ஹெச். வினோத் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று அஜித்தின் ‘வலிமை’. இதனை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இதற்கு முன் வினோத் இயக்கிய ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்கள் பெரிய அளவு பேசப்பட்டது. பின்னர், அஜித் உடன் இணைந்து அவர் இயக்கிய நேர் கொண்ட பார்வை படமும் வெற்றி அடைந்தது. அதனால், அஜித் – ஹெச்.வினோத் கூட்டணி அடுத்ததாக வலிமை படத்தில் இணைந்துள்ளது.

Here's what transpired at the meeting between Thala Ajith and ...

இந்தப் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், ஒரே இயக்குநரின் படத்தில் அஜித் அடுத்தடுத்து தொடர்ந்து நடிப்பதால், கூடுதல் கவனத்தை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே, ‘வலிமை’ படத்தின் அதிரடி சண்டைக் காட்சிகளை எடுப்பதற்காக அஜித் தலைமையில் இப்படக்குழு ஸ்பெயினுக்குச் செல்ல இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பீதியால் உலகம் முழுவதுமே முடங்கிப் போய் உள்ளதால், வெளிநாட்டுப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒட்டு மொத்த திரையுலகமும் முடங்கியுள்ளது.

அன்று முரளி.. இன்று நடிகர் சேது – தமிழ் சினிமாவில் நிகழ்ந்த திடீர் மரணங்கள் 

‘வலிமை’ எந்த மாதிரியான ஜார்னர் திரைப்படம் என்பது குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. பலர் இதனை ஆக்‌ஷன் படம் எனக் கூறி வருகின்றனர். இன்னும் சில கேங்க்ஸ்டர் திரைப்படம் என்றும் கூறி வருகின்றனர். பலர் இது பைக் மற்றும் கார் ரேஸ் சம்பந்தமான த்ரிலர் திரைப்படம் எனக் கூறி வருகின்றனர்.

Thala Ajith and director Venkat Prabhu to join hands. Will it be ...

இந்நிலையில், முதன்முறையாக இயக்குநர் ஹெச். வினோத், ‘வலிமை’ படத்தின் கதை எப்படி இருக்கும் என்பது குறித்த கருத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது பதிவில், “ என்னுடைய ஆல் டைம் விருப்பமான திரைப்படமான ‘மங்காத்தா’வை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தல ரசிகர்களே நீங்கள் அடுத்த ‘மங்காத்தா’வான ‘வலிமை’ படத்தைக் காணத் தயாராகுங்கள்” எனக் கூறியுள்ளார்.

இடைவெளி இல்லாமல் நடைபெறும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வேலைகள்

இந்தப் பதிவின் மூலம் முதன்முதலாக ‘வலிமை’யின் கதைக் கருவைப் பற்றி மெளனம் கலைத்துள்ளார் ஹெச். வினோத். அஜித், நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய ‘மங்காத்தா’ அவரது ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட படங்களில் முதன்மையானது. அதுவும் ப்ளாக் பாஸ்டர் வெற்றிப் படமும் கூட. அஜித்தின் 50வது படம். இப்படிப் பல சிறப்புகளைக் கொண்டுள்ள திரைப்படம் இது. இந்த ஒப்பீட்டால் ‘வலிமை’ குறித்து அதிக உற்சாகத்தில் குதித்துள்ளனர் தல ரசிகர்கள். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.