‘என்னது, குழந்தைகளுக்கு புராஜெக்ட்டா?’ கொரோனா பிரச்னை ஒரு பக்கம் எல்லாத்தையும் முடக்கி, எதிர்காலத்தின் பல விஷயங்களைக் கேள்விக்குறியாக்கி இருந்தாலும், கிடைச்சிருக்கிற லீவை வீட்டுக்குள்ளே ஜாலியாகக் கழிக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கு. இப்பவும் புராஜெக்ட்டா? அதுவும் குழந்தைகளுக்குக் கொடுக்கணுமா? அப்படிச் செஞ்சா, அவங்க டீச்சர்ஸை ஓவர்டேக் பண்ணி நாங்க எதிரியாகிடுவோம். நல்லா கொடுக்கறீங்க ஐடியானு நீங்க முறைக்கிறது தெரியுது.

21 நாள்களில் எவ்வளவு நேரம்தான் வீட்டுக்குள்ளேயே விளையாடுவாங்க… டிவி பார்ப்பாங்க. கொஞ்ச நாளில் சலிச்சுப்போய் உங்ககிட்டே ஏதாவது பெருசா கேட்டு திணறவைக்கிறதுக்கு முன்னாடி, “இந்த லாங் லீவ்ல, நமக்குள்ளே ஜாலியா, யூஸ்ஃபுல்லான சின்னச் சின்ன புராஜெக்ட் ஒர்க் கொடுப்போம். ஒவ்வொண்ணுக்கும் ஒரு டைம் பிக்ஸ் பண்ணிப்போம். அதையெல்லாம் யாரு சரியா பண்றாங்கன்னு பார்ப்போம். அம்மாவும் அப்பாவும் உங்களுக்குக் கொடுக்கிறோம். நீங்க எங்களுக்குக் கொடுங்க”னு பாலிசி எடுக்கவைக்க, தேன் கலந்து பேசற ஏஜென்ட் மாதிரி, குழந்தைகளிடம் பேசி சம்மதிக்க வைங்க.

kids

நீங்க கொடுக்கப்போகிற புராஜெக்ட் வொர்க், ஸ்கூலில் கொடுக்கிற வழக்கமான பாடம் சார்ந்த புராஜெக்ட் மாதிரி இருக்கக் கூடாது. வீட்டுக்குத் தேவையான அன்றாட வாழ்க்கையில பயன்படுகிற மாதிரியான விஷயங்களைச் செய்யறது, எதிர்காலத்தில் குடும்பத் தலைவர்களாக, தலைவிகளாக அவங்க எதிர்கொள்ளப்போகிற பிரச்னைகளைச் சமாளிப்பதற்கான மாடலாக இருக்கணும். முக்கியமான விஷயம், இப்போது வெளியில்போய் எதையும் வாங்கமுடியாதுங்கறதால, வீட்டுல இருக்கிற விஷயங்களின் அடிப்படையில் புராஜெக்ட் செய்யற மாதிரி இருக்கணும். உதாரணத்துக்கு ஒன்றிரண்டு இங்கே…

* மாற்றிவைத்து திறமையைக் காட்டு!

ஓர் அறையில இப்போ இருக்கிற பொருள்களை, அதே அறையில் வேற மாதிரி மாற்றிவெச்சு, அதோடு இன்னும் ஒன்றிரண்டு பொருள்களைச் சேர்க்கணும். ஆனாலும், அந்தப் பொருள்கள் சேர்ந்த பிறகும் தடையில்லாமல் புழங்கற வகையில் இருக்கணும். இதுதான் உங்க வீட்டுப் பிள்ளைகளுக்குக் கொடுக்கிற புராஜெக்ட்.

உதாரணமாக, உங்க வீட்டுப் படுக்கை அறையில் கட்டில், பீரோ, டேபிள், கம்பியூட்டர் இருக்கலாம். இப்போ, ஹாலில் இருக்கிற ஃப்ரிட்ஜ் அல்லது ஷோபாவை உள்ளே கொண்டுவந்து சேர்க்கணும். அதுக்கு ஏற்றமாதிரி படுக்கை அறையின் மற்ற பொருள்களை மாற்றிவெச்சு இடத்தை அட்ஜஸ்ட் செய்யணும்.

kids

எதை எதை எப்படி மாற்றிவைப்பது என்பதையெல்லாம் பிள்ளைகளே முடிவுசெய்யணும். பொருள்களை நகர்த்த நீங்க உதவிசெய்யலாம். உங்க கருத்தைச் சொல்லிட்டு இருக்கக் கூடாது. சரிவராதுன்னு முன்னாடியே தடுக்கக் கூடாது. இது அவங்களுக்கான புராஜெக்ட். முடிச்ச பிறகு சரிவரலைன்னா மாற்றிக்கொள்ளலாம்.

* அசெம்ப்ளிங்!

கட்டில், மின்விசிறி போன்ற கழற்றி பிறகு மாட்டிவிடும் (அசெம்ப்ளிங்) பொருள்கள் சிலதை செலக்ட் பண்ணிக்கணும். அதைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் கழற்றி, பழையபடி மாட்டிக் காட்டணும் என்று புராஜெக்ட் கொடுக்கலாம்.

Also Read: குழந்தை பெற்றோரிடம் கதை  கேட்பதும், வீடியோ பார்ப்பதும் ஒன்றா?! ஓர் அலசல்

முக்கியமான விஷயம், கழற்றிவிட்டு உங்கள் குழந்தைகளுக்கு மாட்டத் தெரியாமல் போனால் பிரச்னை இல்லே. ஆனா, உங்களுக்கு அதைச் சரிசெய்யத் தெரிஞ்சிருக்கணும். உங்களுக்கே தெரியாத அல்லது புதுசா வாங்கிட்டு வந்துதான் சரிசெய்யணும் என்கிற மாதிரியான விஷயத்துல இறக்கிவிடாதீங்க. இது 144 நேரம். கடைகள் இருக்காது. ஆட்கள் கிடைக்க மாட்டாங்க. அப்புறம், ஃபேன் சுத்தல, கட்டிலை மாட்டமுடியலைன்னு முழிக்கக் கூடாது. ஒரு பொருளைக் கழற்றி மாட்டறதுக்கு முன்னாடி அதற்கான டூல்ஸ், மாற்று ஏற்பாடுகள் இருக்கான்னு பார்த்துக்கங்க. மின்விசிறி என்றால், மொத்தமே கழற்றிடாமல் இறக்கைகளை மட்டுமே கழற்றி மாட்டறதா இருக்கணும்.

* விதவிதமாக ஆடை புராஜெக்ட்!

ஒரே வகையான ஆடையை விதவிதமாகப் பல்வேறு வகைகளில் மடித்து அலங்கரிக்கும் புராஜெக்ட் கொடுக்கலாம். 10 சட்டைகளை எடுத்துக்கிட்டா, அதை 10 விதமாக மடிச்சு இருக்கணும்.

அதேபோல, `இப்போ, கற்பனையா ஒரு நான்கு நாள் டூருக்குப் போறோம். ஒரு டிராவல் பேக் மட்டுமே நம்மகிட்ட இருக்கு. அதுல நம்ம அத்தனை பேருக்குமான டிரஸ்ஸை எத்தனை அதிகம் வைக்கமுடியோ, அழகா அடுக்கணும்’ என்று சொல்லலாம்.

kids

டவல், பெட்ஷீட் போன்றவற்றை வைத்து வீட்டின் சில பொருள்களை அழகாக அலங்கரிக்கலாம்.

கொஞ்சம் யோசிச்சா, வீட்டுக்குள் இருக்கப்போகும் இந்த நாள்களில் உங்க பிள்ளைகளின் துறுதுறுப்புக்கு ஈடுகொடுக்கும் பல புராஜெக்ட்டுகளை உருவாக்கலாம். இது, நம் வாழ்க்கையின் பல அன்றாட விஷயங்களை, அழகாகச் செய்ய பழக்கியதாகவும் இருக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம், ஸ்கூல் டீச்சர் மாதிரி புராஜெக்ட் கொடுக்கிறது நீங்களாக மட்டுமே இருக்கக் கூடாது. பதிலுக்கு உங்க பிள்ளைகள் சொல்ற புராஜெக்ட்டை நீங்க செய்துகாட்டணும். ரெடியா?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.