வீட்டில் தனிமையாக முடங்கிப் போய் இருப்பதால் நடிகை மஹிமா நம்பியார் ஓவியம் வரைய ஆரம்பித்துள்ளார்.
 
கொரோனா பீதியால் உலகமே முடங்கிப் போய் உள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க பலரும் பல்வேறு வழிகளில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக ‘தனித்திருப்பது’ என்பது வைரஸ் பரவுவதைத் தடுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்து சில தினம் முன்பு பேசிய பிரதமர் மோடி ‘நீங்கள் வீட்டை விட்டு வெளியே போனால் கொரோனா உங்கள் வீட்டிற்குள் வந்து விடும்’ என்று அறிவுரை வழங்கினார். 
 
Mahima Nambiar Age, Wiki, Height, Bio, Family, Boyfriend, Salary ...
 
ஆகவே நாடு முழுவதும் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் உள்ளனர். தங்களின் அத்தியாவசியத் தேவைக்காகவே அவர்கள் வெளியேற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழகம் கொரோனா தொற்று பரவுவதில் இரண்டாம் கட்டத்திற்கு முன்னேறியுள்ளதாகக் கூறியுள்ளார்.
 
இந்த ஊரடங்கு உத்தரவு திரைத்துறையினரையும் முடக்கிப் போட்டுள்ளது. நாள் தோறும் பரபரப்பாக இருந்த பல திரை நட்சத்திரங்கள் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பலர்  அந்த   நேரத்தை உபயோகமாக மாற்றிக் கொள்ள முயன்று வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக ‘மகாமுனி’ நடிகை மஹிமா நம்பியார் அவரது வீட்டுச் சுவரில் ஓவியங்கள் வரைய ஆரம்பித்துள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோவை அவர் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர், “தனிமைப்படுத்திக் கொள்ள இந்த நேரத்தில் எனக்குள் இருந்த பிக்காசோ வெளியே வருகிறார்.  உங்களுக்கு ஒரு சுவர், ஒரு பெண்சில் மட்டுமே தேவை” எனக் கூறியுள்ளார். பலரும் அவரது முயற்சியைப் பாராட்டி வருகின்றனர்.
 
 
 
 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.