`மூச்சுமுட்ட சாப்பிட்டபோது மகனின் முகம்தான் தெரிந்தது’ – மகனுக்காக பிரியாணி சாப்பிட்ட தந்தை உருக்கம்
கோவை ரயில் நிலையம் முன்பு ரயில் பெட்டி வடிவத்தில் கேரளாவைச் சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி செம்மனூர் ஹோட்டல் ஒன்றை தொடங்கி இருக்கிறார். ஹோட்டலை பிரபலப்படுத்தும் வகையில் பிரியாணி சாப்பிடும்போட்டியை அந்த ஹோட்டல் நிர்வாகம் நேற்று கோவையில் நடத்தி இருந்தது. …