அகமதாபாத்: 2 நாட்களில் 4 பச்சிளம் பெண் குழந்தைகள் சாலையோரத்தில் மீட்பு – தொடரும் அவலம்!
அகமதாபாத்தில் கடந்த 2 நாட்களில் மூன்று குழந்தைகள் உயிருடனும், ஒரு குழந்தை சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள வெஜல்பூர் பகுதியில் ஷியாம் சுந்தர் சொசைட்டியில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் ஒரு பெண் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்போது அவ்வழியாக வந்தவர்கள் அக்குழந்தையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் குழந்தை சிகிச்சைக்காக சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதேபோல் வேஜல்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மற்றொரு பச்சிளம் குழந்தை ஒன்று,…