இந்திய ரயில்வே துறை தற்போது புதிய கட்டண மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றம் வருகிற 26-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
கட்டண மாற்றங்கள் இதோ…
> துணை நகர்ப்புற (Urban) டிக்கெட்டுகள் மற்றும் மாத சீசனல் டிக்கெட்டுகளின் (Monthly Seasonal ticket) விலையில் மாற்றமில்லை.
> சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ வரையிலும் விலை மாற்றமில்லை.
> 215 கி.மீக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் விலை 1 பைசா அதிகரிக்கப்பட உள்ளது.

> மெயில் மற்றும் ஏ.சி இல்லாத எக்ஸ்பிரஸ்களில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் விலை 2 பைசா அதிகரிக்கப்பட உள்ளது.
> ஏ.சி வகுப்பிற்கு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் விலை 2 பைசா அதிகரிக்கப்படுகிறது.
> 500 கிலோ மீட்டர்களுக்கு ஏ.சி இல்லாத வகுப்புகளில் தற்போது உள்ள விலையை விட ரூ.10 அதிகமாக வசூலிக்கப்பட உள்ளது.
> இந்த விலை உயர்வினால் இந்த ஆண்டு ரயில்வே துறைக்கு ரூ.600 கோடி வருமானம் கிடைக்கும்.

