இந்த வாரத்தின் தொடக்கத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆயுஷ் மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.
அங்கே பட்டம் வாங்க வந்த முஸ்லிம் பெண் ஒருவரின் ஹிஜாப்பைப் பிடித்து இழுக்க முயன்றார். இது பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியது.
‘நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும்’ என்று காங்கிரஸ் கண்டனக் குரல் எழுப்பியது.
‘நிதிஷ் குமார் மனநிலை நல்ல நிலையில் இருக்கிறதா?’ என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியது.

சமீபத்திய சர்ச்சை
இந்த நிலையில், நிதிஷ் குமார் ஹிஜாப் பிடித்து இழுத்த பெண் பணியில் இன்னும் சேரவில்லை.
அந்தப் பெண் சபல்பூர் சமூக சுகாதார மையத்தில் சேர நேற்றுதான் கடைசி தேதி. அவர் நேற்று மாலை 6 மணிக்குள் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், அவர் பணியில் சேரவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘சுகாதாரத் துறை இந்தக் கடைசி தேதியை நீட்டிக்கலாம். அப்படி செய்தால், அதற்கான வழிகாட்டுதல் பின்னர் அறிவிக்கப்படும்’ என்று கூறியுள்ளது.
