2024 ஜூலை 21-ம் நாள் கோவை ஆர்.எஸ். புரம் அண்டவாணர் அருட்டுறை ஆலயத்தில் நடைபெற்ற பிரமாண்ட மகாருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டவர்கள் பலரது வாழ்வில் பல அற்புதங்கள் நடைபெற்றன என்று வாசகர்களாலேயே சொல்லப்பட்டது உண்மை. அவை எல்லாம் நெகிழ்ச்சியான உண்மைச் சம்பவங்கள்!
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

அதையொட்டியே வரும் 2026 புத்தாண்டை உங்களுக்கான அதிருஷ்ட ஆண்டாக மாற்ற சிறப்பானதொரு வழிபாட்டு பரிகார ஹோமம் ஒன்றை நடத்த விரும்பினோம். அதற்காகவே ஹோமங்களில் சிறப்பான மகாருத்ர ஹோமத்தை செய்ய முடிவெடுத்தோம். மீண்டும் கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள ஸ்ரீஅண்டவாணர் ஆலயத்திலேயே வெகு அபூர்வமான இந்த மகாருத்ர ஹோமம் வரும் ஜனவரி 2-ம் நாள் மார்கழி திருவாதிரை அபிஷேக நாளில் மகாருத்ர ஹோமம் நடத்த உள்ளோம். மந்திரங்களில் சிறந்ததான ஸ்ரீருத்ரத்தை பலமுறை உச்சரித்து செய்யப்படும் இந்த மகாருத்ர ஹோமம், ஹோமங்களில் சிறந்தது என்று கூறப்படுகிறது. சகல வேண்டுதல்களையும் நிறைவேற்றக் கூடியது என்கின்றன புனித நூல்கள்.
அவ்வகையில் சென்ற முறை இந்த ஹோமத்தில் கலந்து கொண்ட பலரது வேண்டுதல்கள் நிறைவேறின என்பது ஆச்சரியமான தகவல். தொண்டாமுத்தூரைச் சேர்ந்த செல்வம் என்பவரது வாழ்வில் கடன்களும் கவலையுமே நிரம்பி இருந்தன என்றும் நிம்மதியான உறக்கம் இன்றி குடும்பமே தவித்து இருந்தது என்றும் சொல்லி இருந்தார். இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு புனித ரட்சை அணிந்து கொண்டபின் படிப்படியாக பல மாற்றங்கள் நிகழ்ந்து பலரது உதவியாலும் அதிர்ஷ்ட நிகழ்வுகளாலும் 6 மாதங்களிலேயே பழையபடி உயர்ந்த நிலையை அடைந்ததாகவும் கூறி இருந்தார். அதைப்போலவே பெங்களூரில் இருந்து கலந்து கொண்ட விநோதினி அவர்களின் திருமணத்தடைகள் அகன்று அவருக்கு 31 வயதில், நன்கு பரிச்சயமான நல்ல இடத்தில் வரன் அமைந்தது எல்லாம் ஆச்சர்யமான சம்பவம் எனலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
சென்னையில் இருந்து கலந்துகொண்ட பெரியசாமி-முத்துச்செல்வி தம்பதிக்கு ஒரே குறை தான். அவர்களின் இரண்டு மகன்களும் நன்கு படித்துமுடித்த பின்னரும் சரியான வேலை கிடைக்காமல் வீட்டிலேயே இருந்தது. ஏதாவது வேலை கிடைத்தாலும் அதை ஏதேதோ காரணம் சொல்லி தட்டியும் கழித்து வந்தார்கள் என வேதனைப் பட்டார்கள். அவர்களின் கவலையும் இந்த ஹோமத்தால் இரண்டே மாதங்களில் சரியானது என்று தெரிவித்தார்கள்.
இப்படி தீராத நோய்கள் தேர்ந்தவர்கள், வழக்குகளில் நியாயம் பெற்றவர்கள், அநியாயமாக பாதிக்கப்பட்டவர்கள், வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தவர்கள், வியாபாரம்-தொழிலில் தோல்வி அடைந்தவர்கள் என எத்தனையோ பேர் இந்த மகாருத்ர ஹோமத்தால் விரைவில் நல்ல பலனை அடைந்தார்கள் என்பதே இந்த ஹோமத்தின் பெரும் பயன் எனலாம். எனவே நீங்களும் உடனடியாக இந்த ஹோமத்தில் சங்கல்பம் செய்து கொண்டு உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்!
ஆண்டுக்கு ஒருமுறை ஸ்ரீருத்ர ஹோமத்தில் சங்கல்பித்தவர் வீட்டில் எந்த தீமைகளும் வராது. அவர் வேண்டுதலும் விருப்பமும் பலிக்கும் என்பதும் ஐதிகம். வேதங்கள் போற்றும் ஸ்ரீருத்ர மந்திரம் ஒலிக்கும் இடத்தில் தோஷங்களும் பாவங்களும் நீங்கும். நிச்சயம் இந்த ஹோமத்தில் உங்கள் விருப்பங்களை சமர்ப்பித்து சங்கல்பம் செய்து கொண்டால் 48 நாளிலேயே நிறைவேறும் என்பது சென்ற ஆண்டு கலந்து கொண்ட வாசகர்களே சாட்சி என்று பெருமையாகச் சொல்வோம். இந்த துடியான ருத்ர ஹோமத்தால் தீமைகள் விலகி முன்னேற்றம் உருவாகும். இதுவரை தடைப்பட்டிருந்த சகல காரியங்களும் நடைபெறும். வெற்றி வரும். உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் மலரும். எனவே நீங்களும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு வாழ்வில் முன்னேற்றமும் சுபீட்சமும் பெறுங்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
வாசகர்களின் கவனத்துக்கு!
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/-மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.

அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது, பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். குறிப்பிட்ட நாளில் வாசகர்கள், சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் இந்த வழிபாட்டு வைபவங்களை வீடியோ வடிவிலும் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும்.
