‘நிதிஷின் மனநலம் பரிதாபகராமக உள்ளது’ – பெண் மருத்துவரின் ஹிஜாப்பை இழுத்த முதல்வர்; வலுக்கும் கண்டனம்

நேற்று பீகாரில் ஆயுஷ் மருத்துவர் பட்டமளிப்பு விழா நடந்தது. அதில் பீகாரின் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்துகொண்டு பட்டமளித்தார்.

அந்த விழாவில் பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து பட்டம் பெற வந்தார். அவரை ஹிஜாப்பை நீக்குமாறு கூறிகொண்டே, அவரது ஹிஜாப்பை இழுத்துவிட நிதிஷ் குமார் முயற்சி செய்தார்.

நிதிஷ் குமாரின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

பட்டமளிப்பு விழா புகைப்படங்களில் ஒன்று
பட்டமளிப்பு விழா புகைப்படங்களில் ஒன்று

காங்கிரஸ்

நிதிஷ் குமாரின் இந்தச் செயலுக்கு காங்கிரஸ், “பீகாரின் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் வெளிப்படையாகவே இந்த மாதிரியான கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார். அந்த மாநிலத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பார்கள் என்று யோசியுங்கள்.

நிதிஷ்குமார் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கீழ்தரமான செயலை மன்னிக்க முடியாது” என்று எக்ஸ் பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

ராஷ்டிரியா ஜனதா தளம்

ராஷ்டிரியா ஜனதா தளம் தனது எக்ஸ் பக்கத்தில், “நிதிஷ் ஜிக்கு என்ன ஆனது? அவரது மனநலம் முழுமையாக பரிதாபகரமாக ஆகிவிட்டது அல்லது நிதிஷ் பாபு 100 சதவிகிதம் சங்கி ஆகிவிட்டார்” என்று பதிவிட்டுள்ளது.