100 நாள் வேலை திட்டம் : அறிமுகமாக இருக்கும் புதிய நடைமுறைகள் என்னென்ன?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் – இந்திய அரசியல் களத்தில் இப்போதைய தலைப்பு செய்தி.

2008-ம் ஆண்டு முதல், இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது இந்தத் திட்டம். இந்தத் திட்டத்தை ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்’ என்று கூறுவதை விட, ‘100 நாள் வேலை திட்டம்’ என்றால் தான் அனைவருக்கும் பரிச்சயம்.

இந்தத் திட்டம் பல கிராமப்புறவாசிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தது… இருந்து வருகிறது.

100 நாள் வேலைத் திட்டம்
100 நாள் வேலைத் திட்டம்

இப்போது இந்தத் திட்டத்தை மாற்றி புதிய மசோதா ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. அவை…

> `மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்கிற பெயர் ‘வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்புச் சட்டம்’ என்று மாற்றப்பட உள்ளது.

> இந்தத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை என்பது 125 வேலையாக உயர்த்தப்பட இருக்கிறது.

> இப்போதிருக்கும் திட்டத்தின் படி, இந்தத் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை மத்திய அரசே முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ளும்.

ஆனால், புதிய மசோதாப்படி, இந்தத் தொழிலாளர்களுக்கான 60 சதவிகித சம்பளத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்… 40 சதவிகிதம் மாநில அரசு ஏற்றுகொள்ள வேண்டும்.

சில ஸ்பெஷல் பகுதிகளுக்கு மட்டும் 90 சதவிகித சம்பளத்தை மத்திய அரசு ஏற்றுகொள்ளும். மீதி 10 சதவிகிதத்தை அந்தப் பகுதி அரசு ஏற்றுகொள்ள வேண்டும்.

100 நாள் வேலை
100 நாள் வேலை

> இந்தத் திட்டத்தில் ஒரு ஆண்டிற்கு 60 நாள் வரை வேலை இல்லாமல் இருக்கலாம். அதாவது, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பயிர் இல்லாத காலங்களில் தான் பெரும்பாலும் வேலை இருக்கும். அது எத்தனை காலத்திற்கு நீளும் என்று முன்பு தெரியாது. ஆனால், இப்போது இந்த வேலை நிறுத்தம் ஆண்டிற்கு 60 நாள்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

> இந்தத் திட்டத்தில் பணி செய்ததற்கான பணத்தை வாரம் ஒருமுறை கட்டாயம் கொடுத்துவிட வேண்டும். இது அதிகபட்சம் 15 நாள்களுக்கு தாண்டக்கூடாது.’ உள்ளிட்ட மாற்றங்கள் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.