இந்தியாவின் 65 சதவீத சொத்துகளை வைத்திருக்கும் 10 சதவீத பணக்காரர்கள்; ஆய்வறிக்கை சொல்வது என்ன?

2026-ம்‌ ஆண்டிற்கான உலக சமத்துவமின்மை அறிக்கை வெளியாகி உள்ளது.

இது 2018, 2022 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக வரும் அறிக்கை இது ஆகும்.

அதில் கூறப்பட்டுள்ளவை…

இந்தியாவின் முதல் 1 சதவிகித பணக்காரர்கள் 40.1 சதவிகித சொத்துகளை வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் 10 சதவிகித பணக்காரர்கள் 65 சதவிகித சொத்துகளை வைத்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள 40 சதவிகித நடுத்தர மக்களும், மீதமுள்ள 50 சதவிகித மக்களும்‌ முறையே 28.6 சதவிகித சொத்துகளையும், 6.4 சதவிகித சொத்துகளையும் வைத்துள்ளனர்.

உலக சமத்துவமின்மை அறிக்கை, 2026
உலக சமத்துவமின்மை அறிக்கை, 2026

அடித்தட்டில் உள்ள 50 சதவீத மக்கள், இந்தியாவின் மொத்த வருமானத்தில் வெறும் 15 சதவீதத்தை மட்டுமே பெறுகிறார்கள்.

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வில் பெரிய மாற்றம் இல்லை.

உலகளவில் பார்க்கும்போது…

முதல் 10 சதவிகித பணக்காரர்கள் 75 சதவிகித சொத்துகளை வைத்துள்ளனர்.

அடுத்ததாக உள்ள 40 சதவிகித நடுத்தர மக்களும், மீதமுள்ள 50 சதவிகித மக்களும்‌ முறையே 23 சதவிகித சொத்துகளையும், 2 சதவிகித சொத்துகளையும் வைத்துள்ளனர்.

உலகத்திலுள்ள 5 டாப் பொருளாதார நாடுகளின் சராசரி தனிநபர் வருமான அளவும் வெளியிடப்பட்டுள்ளது.

1. அமெரிக்கா – 69,603 டாலர்கள்

2. சீனா – 2,552 டாலர்கள்

3. ஜெர்மனி – 59,423 டாலர்கள்

4. இந்தியா – 9,095 டாலர்கள்

5. ஜப்பான் – 45,082 டாலர்கள்