`மீண்டும் மஞ்சப்பை’ – பரிசுத்தொகை, விருதுகளை அறிவித்த தமிழக அரசு – எப்படி விண்ணப்பிக்கலாம்?

‘மீண்டும் மஞ்சப்பை’திட்டம்

பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதுமாக தவிர்த்து, நமது பாரம்பரிய மஞ்சப்பையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவே தமிழக அரசு கொண்டு வந்த திட்டம் “மீண்டும் மஞ்சப்பை” திட்டமாகும்.

2021 ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கியுள்ள இந்தத் திட்டத்தின் நோக்கமே -சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களையே நாம் பயன்படுத்த வேண்டும் என்பதுதான்.

இத்தகைய திட்டங்கள் பிளாஸ்டிக் மாசுபாட்டை, குறிப்பாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதில் சிறந்த முயற்சிகளாக இருந்து வருகின்றன.

மஞ்சப்பை பயன்பாட்டிற்கு பரிசுத்தொகை
மஞ்சப்பை பயன்பாட்டிற்கு பரிசுத்தொகை

மாநில அளவில் பரிசு

தமிழக அரசின் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, இந்த ஆண்டுக்கான மஞ்சப்பை விருதுகளை அறிவித்துள்ளது. அதில்,

மஞ்சப்பை பயன்பாட்டிற்கு பரிசுத்தொகை
மஞ்சப்பை பயன்பாட்டிற்கு பரிசுத்தொகை

“ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தங்கள் வளாகத்திலும் வளாகத்திற்கு வெளியிலும் முழுவதுமாக தவிர்த்து, அதற்கு பதிலாக மஞ்சப்பை போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்தும் சிறந்த மூன்று பள்ளிகள், மூன்று கல்லூரிகள், மூன்று வணிக நிறுவனங்களுக்கு மாநில அளவில் பரிசு வழங்கப்படும்.

முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“மீண்டும் மஞ்சப்பை” பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர், “மஞ்சப்பை விருது”களை சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார்.

மஞ்சப்பை பயன்பாட்டிற்கு பரிசுத்தொகை
மஞ்சப்பை பயன்பாட்டிற்கு பரிசுத்தொகை

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளத்தில்அல்லது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் (tnpcb.gov.in) டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர்/ அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும்.

விண்ணப்பங்களின் மென் நகலுடன் (soft copy) இரண்டு அச்சுப் பிரதிகள் (hard copy) அந்தந்த மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் 15.1.2026-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.