MSME என்று சொல்லப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களைச் செய்பவர்கள் இந்தியாவில் மிக அதிகமான எண்ணிக்கையில் நம் தமிழகத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்கள் இருக்கிறார்கள்.
இந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்களின் மிகப் பெரிய சவாலே, அவர்கள் செய்யும் தொழிலின் முக்கியமான பல துறைகளை அவர்களே கவனிக்க வேண்டும் என்று நினைப்பதுதான். ஒரு தொழில்முனைவோர் உற்பத்தி தொடர்பான விஷயங்களைக் கவனித்து முடிவு செய்வதில் வல்லவராக இருப்பார். இன்னும் சிலர், உற்பத்தி தவிர, மார்க்கெட்டிங் தொடர்பான விஷயங்களிலும் வல்லவராக இருப்பார்.

ஆனால், நிறுவனத்தின் ஃபைனான்ஸ் தொடர்பான விஷயங்களில் எல்லா சிறு தொழில்முனைவோர்களும் கில்லாடிகளாக இருப்பதில்லை. இதனால், அந்தத் தொழில்முனைவோர் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அவரால் அதிக லாபத்தை ஈட்டி, நிறுவனத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்ல முடிவதில்லை.
நிறுவனத்தின் ஃபைனான்ஸ் தொடர்பான விஷயங்களை சரியாக கண்காணித்து, அதை நடைமுறைப்படுத்தும்போது, தேவை இல்லாத விரயங்கள் தடுக்கப்படுகின்றன. இதனால், நிறுவனத்துக்குக் கிடைக்கும் லாபமானது சிந்தாமல் சிதறாமல் நிறுவனத்தின் கணக்கிற்கு வந்து சேர்கிறது. நிறுவனத்தின் முன்னேற்றமும் மிகப் பெரிய அளவில் வளர்கிறது.
ஒரு தொழில்முனைவோர் தன்னுடைய நிறுவனத்தை தொடர்ந்து அதிக லாபத்தை சம்பாதித்து, முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் எனில், அவர் தனது தொழில் நிறுவனத்தின் ஃபைனான்ஸ் துறையைப் பக்காவாக வைத்திருக்க வேண்டும். ஆனால், இப்போது மிகப் பெரிய பிரச்னையே, இந்த ஃபைனான்ஸ் தொடர்பான விஷயங்களை எங்கே போய் கற்றுக்கொள்வது என்பதுதான்.

இந்தக் கேள்விக்கான பதில்களை சொல்லத்தான் ‘லாபம்’ மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் ஒரு சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. வருகிற புதன்கிழமை மாலை 7.30 மணி முதல் 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறு தொழில்முனைவோர்கள் தங்கள் நிறுவனத்தின் ஃபைனான்ஸ் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் அடையத் தேவையான விஷயங்கள் என்னென்ன செய்ய வேண்டும், அதை எப்படி செய்ய வேண்டும், இந்த விஷயங்களை செய்யும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லப் போகிறார் மாருதி பவர் கன்ட்ரோல் சிஸ்டம் நிறுவனத்தின் சி.இ.ஓ.வும் ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான ஆனந்தம் செல்வகுமார். இவர், தனது மாருதி பவர் கன்ட்ரோல் நிறுவனத்தை 15 ஆண்டுகளுக்கும் மேலாக லாபகரமாக நடத்தி வருவதன் மூலம் நிறுவனத்தைத் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று கொண்டு இருக்கிறார்.
இந்த ஆன்லைன் கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்கள் கலந்துகொள்ள விரும்பும் பட்சத்தில், https://forms.gle/MJvcrsE1nPwQuYHL6 என்கிற இந்த லிங்க்கினை சொடுக்கி, கட்டாயமாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்படிப் பதிவு செய்துகொள்பவர்களுக்கு மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான லிங்க் அனுப்பப்படும்.
சிறு தொழில்முனைவோர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதன் மூலம் தங்கள் நிறுவனத்தின் ஃபைனான்ஸை எப்படி நிர்வாகம் செய்வது, வருவாயையும் லாபத்தையும் எப்படி அதிகரிப்பது, நிறுவனத்தின் முதலீடு வீணாகாமல் தடுப்பது எப்படி என்கிற விஷயங்களை எல்லாம் தெரிந்துகொண்டு, நிறுவனத்தின் லாபத்தை அதிகமாக்க முடியும். இதன் மூலம் நிறுவனத்தைத் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.
உங்கள் நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான வழிகளைக் காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த வழிகளைக் கற்றுக்கொண்டு, உங்கள் நிறுவனத்தை முன்னேற்ற நீங்கள் தயாரா?
