‘விஜய் 8 பேர் கால்லையும் விழுந்து மன்னிப்பு கேட்டாரு’- சந்திப்பு குறித்து பாதிக்கப்பட்ட குடும்பம்

கரூரில் கடந்த செப். 27-ம் தேதி தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்ச ரூபாய் தவெக சார்பில் கொடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் மாமல்லபுரத்துக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார்.

TVK Vijay Karur Stampede
TVK Vijay Karur Stampede

இந்நிலையில் விஜய்யை சந்தித்தது குறித்து இன்று (அக்.28) பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்த்த பெண் ஒருவர் கரூரில் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.

“நாங்க உள்ள போனதுமே என்ன மன்னிச்சிருங்கன்னு சொன்னாரு. அவர் கூட யாருமே அந்த ரூம்ல இல்ல. அவர் மட்டும்தான் இருந்தாரு.

உங்க குடும்பத்துல ஒருத்தரா என்னை ஏத்துக்கோங்க. என்ன வசதி வேணுமோ அதை நான் செஞ்சு தரேன். உங்க குடும்பப் பையன என்னை நினைச்சுக்கோங்க.

குழந்தைகளை கரூர் பிரசாரத்துக்கு கூடிட்டிட்டு போனதுக்கு நாங்களும் அவர்கிட்ட மன்னிப்பு கேட்டோம்.

TVK Vijay
TVK Vijay

நாங்க 8 பேர் போனோம். 8 பேர் கால்லையும் விழுந்துட்டாரு. உள்ள வந்ததும் கையெடுத்து கும்பிட்டு மன்னிச்சிடுங்கன்னு சொல்லி அழுதுட்டாரு.

நாங்ககூட தெம்பா இருந்தோம். ஆனா அவர் இளைச்சிபோய் இருந்தாரு. இவ்வளவு செலவு பண்ணனும்னு அவசியம் இல்ல.

அவர் சொந்த உழைப்பில் வந்த காசு. கரூர் வரேன்னு சொல்லிருக்காரு” என்று பேசியிருக்கிறார்.