வடகிழக்குப் பருவமழை, மோன்தா புயல் என சென்னையில் கடந்த சில தினங்களாக தினமும் காலையில் மழை அட்டென்டன்ஸைப் போட்டுவிடுகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும், வேலைக்குச் செல்வோருக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
இதையும் தாண்டிய சிரமம் என்றால்… செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பது, ஆங்காங்கே இருக்கும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பது, சாக்கடை மூடாமல் இருப்பது எனத் தொடர்ந்து இந்த மழைக்காலம் சின்ன திகில் அனுபவத்தைத் தந்துகொண்டே வருகிறது.
இதை சுட்டிக்காட்ட சென்னை மக்களான உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இதோ…

உங்கள் பகுதியில் மழை தண்ணீர் தேங்கியிருப்பது, சாக்கடைகள் மூடாமல் இருப்பது போன்ற மழை பாதிப்புகள் ஏதேனும் இருந்தால், அதை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து விகடனுக்கு அனுப்பலாம்.
நீங்கள் போட்டோ அல்லது வீடியோ அனுப்பும்போது செய்ய வேண்டிய விஷயம்… உங்கள் பெயர், நீங்கள் எந்தப் பகுதியில் அந்த போட்டோவை எடுத்திருக்கிறீர்கள், அந்த போட்டோ எடுத்த தேதி, நேரத்தோடு 73050 71364 இந்த வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி வையுங்கள், அல்லது [email protected] என்கிற மெயில் IDக்கும் அனுப்பி வையுங்கள்.
