புதின் போன் காலுக்குப் பின், ஜெலன்ஸ்கியை நெருக்கும் ட்ரம்ப் – என்ன நடந்தது?

ரஷ்யா – உக்ரைன் போர் பொறுத்தவரையில், ஆரம்பதில் இருந்தே அமெரிக்கா உக்ரைனின் பக்கம் நின்று வருகிறது.

சுமுக உறவு

ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதும், அவர் பெரிதும் ஆதரவு தந்துவருவது அவரின் நண்பரான ரஷ்ய அதிபர் புதினுக்கு.

கடந்த பிப்ரவரி மாதம், வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு நடந்தது. அதன் முடிவு மிகவும் மோசமாக முடிந்தது.

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி
ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி

அதன் பின், ஐரோப்ப நாடுகளின் தலைவர்களின் தலையீட்டால் ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி உறவு சுமுகமாகியது. ட்ரம்பும் போரைத் தொடர்வதற்காக புதினைக் கடுமையாகச் சாடி வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை ட்ரம்ப்பும், புதினும் தொலைபேசியில் உரையாடி கொண்டனர். அதே தினம் ட்ரம்பை ஜெலன்ஸ்கி சந்தித்தார்.

அந்தச் சந்திப்பில் ட்ரம்பின் நிலைப்பாடு யு-டர்ன் போட்டிருக்கிறது.

ட்ரம்ப் போட்ட யு-டர்ன்

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, ட்ரம்ப் ஜெலன்ஸ்கியிடம், ‘புதின் இதைப் போர் என்று குறிப்பிடவில்லை… ஸ்பெஷல் ஆபரேஷன் என்றே கூறுகிறார். புதின் நினைத்தால் உக்ரைனைக் கைப்பற்றிவிடலாம்.

புதின் கூறும் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

இந்தச் சந்திப்பில் ட்ரம்ப் பெரும்பாலும் புதினுக்கு ஆதரவாகவே பேசியுள்ளார். இது அவர் முன்பு பேசிய போன்காலின் பிரதிபலிப்பே என்றும் கூறுகிறார்கள்.