“விஜய்க்கு எதற்கு ஆதரவாக இருக்கிறோம் என்றால்.!” – கூட்டணி குறித்து தமிழிசை

தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (அக்.16) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

விஜய்க்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. கரூர் விஷயத்தில் முழுமையான கவனம் செலுத்தாமல் அரசாங்கம் அநீதி இழைத்திருக்கிறது.

விஜய்க்கு மட்டும் அநீதி இழைக்கவில்லை. அவர்களைப் பார்க்க வந்த தொண்டர்களுக்கும் அநீதி இழைத்திருக்கிறார்கள்.

TVK Vijay
TVK Vijay

இதை நான் சொல்லவில்லை. உச்ச நீதிமன்றமே இதுபோன்ற கருத்துக்களைச் சொல்லியிருக்கிறது.

இன்றைக்கு ஏன் முதலமைச்சருக்கு இவ்வளவு கோபம் வருகிறது. அன்றைக்கு மெரினா கடற்கரையில் வானூர்தி சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது மனதுக்கு வேதனை.

அந்தப் பழியை யார் மீது போடுவீர்கள். எல்லாவற்றுக்கும் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

தேர்தல் நெருங்க நெருங்க இவர்களின் சாயம் வெளுக்கப்போகிறது. மக்கள் வெளுத்து வாங்கப்போகிறார்கள் என்பதுதான் உண்மை.

எதிர்க்கட்சிகளை எந்த நிகழ்ச்சியையும் நடத்தவிடுவதில்லை. விஜய்க்கு எதற்கு ஆதரவாக இருக்கிறோம் என்றால் அவரைப் போல நாங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

Mk Stalin - ஸ்டாலின்
Mk Stalin – ஸ்டாலின்

ஆர்ப்பாட்டத்திற்கு ஒரு நேரம் கேட்டால், அனுமதி கேட்டால் தருவதில்லை. விஜய் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருடன் இருக்கிறோம். கூட்டணி நடக்கலாம். எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நாங்கள் கூட்டாக அரசாங்கத்தை எதிர்ப்போம். அது கூட்டணியா? அல்லது கூட்டாகவா? என்பதை வருங்காலம் முடிவு செய்யும்” என்று பேசியிருக்கிறார்.