ஆந்திராவில் Google AI Hub திட்டம்; “ஆனால் நம்ம முதல்வர் இந்தியைத் தடை செய்ய முயல்கிறார்” – அண்ணாமலை

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அடுத்த கட்ட பாய்ச்சலாக, கூகுளின் ‘Google AI hub data centre’ஐ ஆந்திர மாநில விசாகப்பட்டினத்தில் பெரிய அளவில் கட்டமைக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

நேற்று, சுமார் ₹1.25 லட்சம் கோடி ($15 Billion) வரை முதலீடு கொண்ட இந்தத் திட்டத்திற்கான ஒப்புதலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டார்.

இது இந்திய தொழில்நுட்ப வளர்ச்சியில் இது மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என்றும் இதன் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறியிருக்கிறார் சுந்தர் பிச்சை.

இது ஆந்திராவின் தொழில்நுட்ப வளர்ச்சின் முன்னேற்றத்திற்கும், வேலை வாய்ப்பிற்கும் பெரும் மைல் கல்லாக அமையும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “ஆந்திரா முதல்வர் தொழில்நுட்பத்தில் பெரும் மைல் கல்லாக $15 டாலர் முதலீடு கொண்ட கூகுள் ‘AI hub data centre’யை விசாகப்பட்டினத்தில் அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்.

ஆனால், இங்கு தமிழ்நாடு முதல்வர் நம் மாநிலத்தில் இந்தியைத் தடை செய்யும் மசோதாவை கொண்டு வர பார்க்கிறார். திமுகவின் மலிவான அரசியலும், தேவையற்ற விஷயங்களுக்கு முன்னுரிமை தருவதும்” என்று முதல்வர் ஸ்டாலினை விமர்சித்திருக்கிறார்கள்.