டாப் 10 இடங்களில் இருந்து கீழிறங்கிய அமெரிக்க பாஸ்போர்ட்; இதுக்கு காரணமும் ட்ரம்ப் தான்!

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலின் டாப் 10 இடங்களில் இருந்து அமெரிக்காவின் பாஸ்போர்ட் கீழிறங்கியுள்ளது.

சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எப்படி நிர்ணயிக்கப்படும்?

குறிப்பிட்ட பாஸ்போர்ட்டை வைத்து எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதை பொறுத்து, சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியல் வெளியிடப்படும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்பின் அதிரடிகள்

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவில் பிற நாட்டு மக்கள் குடியேறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அமெரிக்காவில் விசா நடைமுறைகளிலும் கடும் கெடுபிடிகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

இதன் விளைவாக, சமீபத்தில் வெளியான லண்டனைச் சேர்ந்த ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் படி, அமெரிக்காவின் பாஸ்போர்ட் 12-வது இடத்தைப் பிடித்துள்ளது.

12-வதுஇடம்

பொதுவாக, அமெரிக்கா பாஸ்போர்ட் முதல் 10 இடங்களில் இருக்கும். ஆனால், தற்போதைய சூழல் காரணமாக, அது 12-வது இடத்தைப் பிடித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் 10 இடங்களில் இருந்து அமெரிக்கா பாஸ்போர்ட் இறங்குவது இதுவே முதல்குறை.

முதல் 5 இடங்களைப் பிடித்த நாடுகள்

இந்தக் குறியீட்டில் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தைத் தென் கொரியா,

மூன்றாவது இடத்தை ஜப்பான்,

நான்காவது இடத்தை ஜெர்மனி, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து,

ஐந்தாவது இடத்தை ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து பிடித்துள்ளது.