“சாமானியர்கள் அரசியலுக்கு வந்தால் இதுதான் நிலைமை” – தவெக நிர்மல்குமார் பேட்டி

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்திருந்தது. உயர் நீதிமன்றம் அஸ்ரா கார்க் தலைமையில் காவல்துறையின் SIT குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

ஆனால், இந்த கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றச் சொல்லியும் எஸ்.ஐ.டி விசாரணைக்கு தடை கோரியும் தவெக தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

 Karur சம்பவம்: CBI விசாரணை; உயர் நீதிமன்றத்துக்கு கண்டனம்! - Supreme Court | TVK DMK |Imperfect Show
Imperfect Show

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றிருக்கும் தவெக விஜய், “நீதி வெல்லும்” என ஒற்றைச் சொல்லில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் விஜய்யை சந்தித்துவிட்டு வந்த தவெக மாநில இணை செயலாளர் நிர்மல்குமார், “இது மக்களுக்கான தீர்ப்பு. 41பேர் இந்த விஷியத்தில் இவ்வளவு மோசமான அரசியலை செய்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

எங்கள் கட்சியில் தலைவர் விஜய் உட்பட எல்லாரும் சாமானியர்கள். சாமானியர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தவெக நிர்மல்குமார்
தவெக நிர்மல்குமார்

இந்த துயர சம்பவத்தில் எவ்வளவு கட்டுக்கதைகள், வெறுப்புகளை இந்த திமுக அரசு பரப்பியது என்று மக்களுக்குத் தெரியும். உண்மை வெளிச்சத்திற்கு வரும், தமிழக மக்களுக்கு நடந்த உண்மை விரைவில் தெரிய வரும். விரைவில் விரிவான செய்தியாளர் சந்திப்பை நடத்துவோம்” என்று கூறியிருக்கிறார்