இந்தியா முழுவதும் ஹிட் ஆகியிருக்கும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இன்று சமூக வலைதளத்தில் முக்கிய பேசுபொருளாக இருக்கிறது. விமர்சகர்கள், ரசிகர்கள், திரையுலகினரைக் கடந்து பல துறைகளைச் சேர்ந்தவர்கள் படக்குழுவை வாழ்த்தியுள்ளனர்.

Kantara Capter 1 – அண்ணாமலை ரிவியூ
அந்தவகையில் முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “காந்தாரா சாப்டர் 1 படத்தைப் பார்த்தேன். நம்பிக்கை மற்றும் நாட்டுப்புற கதைகளின் வியக்கவைக்கும் கலவை. நடிகராகவும் இயக்குநராகவும் ரிஷப் ஷெட்டி பிரகாசமான பங்களிப்பைச் செய்துள்ளார், தர்மத்தையும் துளு நாட்டின் கலாச்சாரத்தையும் ஒன்றாக சேர்த்துள்ளார், பஞ்சுருளி தெய்வம் மற்றும் குலிகா வழிபாட்டுடன் அவர்களின் பல்வேறு வெளிப்பாடுகளைக் காட்டியிருக்கிறார்.
பிரபஞ்சத்தை நிலையாக வைத்திருக்கும் மற்றும் அதை எப்போதும் தர்மத்தின் பாதைக்குக் கொண்டுவரும் பஞ்ச பூதத்தின் நித்தியமான மற்றும் நுட்பமான சமநிலை தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் வியக்கவைக்கும் வகையில் நேர்த்தியாக, உலகத்தரமான தயாரிப்பையும் VFX-ஐயும் காட்டுகிறது.

நான் குடிமைப் பணியாளராக (IAS) பணியாற்றியபோது இந்த ஆழமாக வேரூன்றிய பாரம்பரியத்தை நேரில் கண்டிருக்கிறேன், இந்தபடம் ஒரு ஆன்மீக மறுவருகை போலவும் நினைவின் பாதையில் நடந்து சென்றது போலவும் இருந்தது.
நமது திரைப்படங்கள் எல்லாம் Woke culture-இன் ஆதிக்கத்திலிருக்கும்போது, ஹோம்பலே ஃபிலிம்ஸ் மீண்டும் பாரதத்தின் ஆன்மாவை வெளிச்சமிட்டுக் காட்டியதற்கு பாராட்டுகள்.” எனக் கூறியுள்ளார்.
அண்ணாமலையின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரிஷப் ஷெட்டி.