இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேற்று துபாயில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி பங்கேற்கக் கூடாது என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
அதோடு இப்போட்டிக்கு எதிராக அக்கட்சியினர் மும்பையில் போராட்டமும் நடத்தினர். அவர்கள் டிவியை உடைத்து இப்போராட்டத்தை நடத்தினர். இந்த கிரிக்கெட் போட்டியில் பெரிய அளவில் சூதாட்டம் நடந்திருப்பதாக அக்கட்சியின் எம்.பி சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ”இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்குக் சூதாட்டம் நடந்திருக்கிறது.

இதில் ரூ.25 ஆயிரம் கோடி பாகிஸ்தானுக்குச் சென்று இருக்கிறது. அந்தப் பணம் நமக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்று அரசுக்கோ அல்லது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கோ தெரியாதா? இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டி மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஆயிரம் கோடி கிடைத்து இருக்கிறது. அந்தப் பணம் நமக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். இக்கிரிக்கெட் போட்டி கேலிக்கூத்தானதாகும் ஆகும்.
மேலும் பாகிஸ்தான் வீரர்களுடன் போட்டிக்குப் பின் கைகுலுக்கிக்கொள்ள இந்தியா வீரர்கள் மறுத்தது தன்னிச்சையான செயல் அல்ல, மாறாக இந்திய ஆதரவு மூத்த அதிகாரி ஒருவர் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முடிவு.
தற்போதைய சூழ்நிலையில் கிரிக்கெட் போட்டிக்கு அனுமதித்து இருப்பது தவறாக மதிப்பிடப்பட்ட ஒன்று. இது பிற்காலத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டார்.

ஆனால் இக்கிரிக்கெட் போட்டியை ஆதரித்த மகாராஷ்டிரா பா.ஜ.க அமைச்சர் ஆசிஷ் ஷெலார், ”ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதற்கு இந்தியாவை அனுமதித்த மத்திய அரசின் முடிவை நாட்டு மக்கள் முழுமையாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
இது ஒரு சர்வதேச போட்டியே தவிர இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுப்பயணம் அல்ல” என்று தெரிவித்தார்.
துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடின. இதில் இந்தியா அமோக வெற்றி பெற்றது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…