இஸ்ரேல்-பாலஸ்தீன போர்:
இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் உலகளவில் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு காரணம், இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தியும், கடுமையான கெடுபிடிகளையும் விதித்தும் வருகிறது.
இந்தப் போரில் உயிரிழப்பவர்கள் தவிர, உணவு கிடைக்காமல் பசியால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் காசாவில் அதிகரித்து வருகிறது.

ட்ரம்ப் பதிவு
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில்,
“பணய கைதிகள் நாடு திரும்ப வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். அனைவருக்கும் இந்தப் போர் முடிவடைய வேண்டும்.
இஸ்ரேல் என்னுடைய நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டுவிட்டது.
இப்போது ஹமாஸும் ஒப்புக்கொள்ள வேண்டிய நேரமாகும். ஒத்துக்கொள்ளவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை ஹமாஸிடம் நான் எச்சரித்திருக்கிறேன். இது என்னுடைய கடைசி எச்சரிக்கை. இன்னொரு எச்சரிக்கை இருக்காது,” என்று பதிவிட்டிருக்கிறார்.
பணயக் கைதிகளை விடுவிக்குமாறு நீண்ட நாள்களாக இஸ்ரேல் ஹமாஸை எச்சரித்து வருகிறது. இதன் கோர காரணமாகத் தான், இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு செல்லும் உணவுகளைத் தடுத்து வருகிறது.
இந்த நிலையில், பணயக் கைதிகளை விடுவித்தால், இஸ்ரேல் போரை நிறுத்துமா? பாலஸ்தீனத்தில் பழைய நிலைமை திரும்புமா? அதை ட்ரம்ப் உறுதி செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
