ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகிறது.
சமீபத்தில், இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதை அமலுக்கும் கொண்டுவந்தார். அதற்கு இந்திய தரப்பிலிருந்து அதிருப்தியும் எழுந்தது.
இதற்கிடையில், சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற SCO உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினையும் சந்தித்தார்.

இது குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, “மோடி ஒரு சிறந்த தலைவர்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இருந்தும், அவர் ஏன் ரஷ்யா அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் கைகோர்க்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை.
எனவே நான் இந்திய மக்களுக்குச் சொல்ல விரும்புவது இதுதான், இங்கு என்ன நடக்கிறது என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.
பிராமணர்கள் இந்திய மக்களின் இழப்பில் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை நாம் நிறுத்த வேண்டும்” என்று கூறினார்.
இதற்கு முன்னர் ரஷ்யா – உக்ரைன் போரை மோடியின் போர் எனக் கூறியவர், இந்தியர்கள் மிகவும் திமிர்பிடித்தவர்கள் என்றும் விமர்சித்திருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.