சீனா: “மன அழுத்தைப் போக்கவே இதைச் செய்தேன்” – பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து ரத்தத்தைத் திருடிய நபர்

சீனாவைச் சேர்ந்த லி என்பவர் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, ரத்தம் எடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, யு என்ற அந்தப் பெண் தனது படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது லியின் வீட்டுக் கதவைத் தள்ளி உள்ளே நுழைந்து, மயக்க மருந்து ஊற்றிய துணியைப் பயன்படுத்தி அவரை மயக்கமடையச் செய்து அந்தப் பெண்ணின் கையிலிருந்து ரத்தம் எடுத்துள்ளார்.

rep images

யுவின் கணவர் எதிர்பாராதவிதமாக அந்தச் சமயத்தில் வீடு திரும்பியபோது, அவரைப் பார்த்த லி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மயக்கம் தெளிந்த பிறகு, தனது கையில் ஊசி குத்திய தடம் இருப்பதைக் கண்டறிந்த அந்தப் பெண் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றிருக்கிறார்.

லி விட்டுச் சென்ற துணியில் மயக்க மருந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. விசாரணையின் போது, லி தனது செயல்கள் மன அழுத்தத்தைப் போக்குவதற்காக மட்டுமே செய்யப்பட்டவை என்று கூறியிருக்கிறார்.

“பிறர் வீடுகளுக்குள் ரகசியமாக நுழைவது எனக்குப் பரபரப்பை அளிக்கிறது. இது என் அழுத்தத்தைப் போக்க உதவுகிறது” என்று அவர் கூறியிருக்கிறார். பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து, ரத்தம் எடுத்ததற்காக லி என்பவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk