“குருகுலக் கல்வியை இன்றைய கல்வியுடன் இணைக்க வேண்டும்” – RSS தலைவர் மோகன் பகவத் பேசியது என்ன?

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா மூன்று நாள் கருத்தரங்கு தொடர் சொற்பொழிவுடன் நடைபெற்று வருகிறது.

இதில் செய்தியாளர்களிடம் பேசி வரும் மோகன் பகவத் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அதில், குருகுல் கல்வி பற்றி பேசிய அவர், “பாரதத்தைப் புரிந்துகொள்ள சமஸ்கிருதம் தேவைப்படுகிறது. வேத காலத்தின் 64 அம்சங்களும் கற்பிக்கப்பட வேண்டும்.

குருகுலக் கல்வியை மாற்றாமல், அதனை இன்றைய கல்வியுடன் இணைக்க வேண்டும். நமது குருகுல் மாதிரி பின்லாந்தின் கல்வி மாதிரியைப் போன்றது.

கல்வியில் முன்னணி நாடான பின்லாந்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க தனிப் பல்கலைக்கழகம் உள்ளது” என்று கூறினார்.

மோகன் பகவத்
மோகன் பகவத்

கல்விக் கொள்கை பற்றி பேசிய மோகன் பகவத், “கல்வி மிகவும் முக்கியமானது. கல்வி என்பது வெறும் தகவல்களைச் சேகரித்து வைப்பது மட்டுமல்ல; ஒருவரை மனிதனாக மாற்ற வேண்டும். அத்தகைய கல்வி முறையே எதிர்பார்க்கிறோம்.

நமது கல்வி அமைப்பு அழிக்கப்பட்டு விட்டது. நாம் அடிமைகளாக இருந்த போது புதிய கல்வி முறை கொண்டு வரப்பட்டது. ஆட்சியாளர்களுக்கு ஏற்ப அமைப்பு மாற்றப்பட்டது.

ஆனால் இப்போது சுதந்திரம் பெற்று விட்டோம். நாம் அரசுகளை நடத்துவது மட்டும் அல்லாமல், மக்களும் அதனை பின்பற்ற வேண்டும். இந்த திசையில் நாம் பயணிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் இந்த விஷயங்கள் உள்ளடக்கப்பட்டு இருக்கிறது,” என்று அவர் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs