“இப்போதைக்கு வாக்காளர் அடையாளம்தான் குறி அதைத் தொடர்ந்து..!”- ராகுல் பேச்சு

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது, போலியான வாக்காளர்களைப் புகுத்துவதற்கான ‘பெரிய சதி’யின் ஒரு பகுதி எனத் தெரிவித்திருக்கிறார்.

அவரது ‘பாரத் வாக்காளர் அதிகார் யாத்திரை’-யின் பன்னிரண்டாவது நாளன நேற்று பீகார் மாநிலத்தின் சீதாமர்ஹி பகுதியில் உரையாற்றிய ராகுல் காந்தி, “பா.ஜ.க தலித்துகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBC), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), சிறுபான்மையினர் மற்றும் ஏழைகள் உள்ளிட்ட விளிம்புநிலை மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்களை குறிவைத்து நீக்கி வருகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அதே நேரத்தில் பணக்காரர்களின் பெயர்களை நீக்கவில்லை. இது ஒரு விபத்து அல்ல. இது ஒரு திட்டம். வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டால், அனைத்தும் பறிபோய்விடும். முதலில் அவர்கள் உங்கள் வாக்கை எடுத்துக்கொள்வார்கள், பின்னர் உங்கள் ரேஷன் கார்டை எடுத்துக்கொள்வார்கள்.

பின்னர் உங்கள் நிலத்தை – இறுதியாக, உங்கள் அனைத்து உரிமைகளையும் எடுத்துக்கொள்வார்கள். கர்நாடகாவில் மகாதேவபுராவில் அவர்கள் வாக்குகளை திருடியதை நாங்கள் கண்டுபிடித்தோம். பீகார் அவர்களின் அடுத்த விளையாட்டு மைதானமாக இருக்காது.

தொடர்ந்து நடைபெற்று வரும் வாக்காளர் அதிகார் யாத்திரை, இந்திய கூட்டணியின் ஆதரவுடன் வெறும் ஒரு அடையாள பிரசாரம் மட்டுமல்ல. உரிமை காப்பு போராட்டம். வாக்காளர் ஒடுக்குமுறை பொறுத்துக்கொள்ளப்படாது என்று தேர்தல் ஆணையத்திற்கும் பா.ஜ.க-விற்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk