‘ட்ரம்ப் வரியால் திருப்பூரில் ரூ.3,000 கோடி ஏற்றுமதி பாதிப்பு’ – முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 50 சதவிகித வரி அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளில் 68 சதவிகிதம் திருப்பூரில் இருந்து தான் செல்கிறது.

ட்ரம்பின் வரியால், திருப்பூரில் கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி மதிப்புள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்க உள்ளது.

ட்ரம்ப் வரி விதிப்புகளை அறிவித்தப்போது...
ட்ரம்ப் வரி விதிப்புகளை அறிவித்தப்போது…

ஸ்டாலின் பதிவு

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது…

“அமெரிக்காவின் 50 சதவிகித வரி விதிப்பு தமிழ்நாட்டின் ஏற்றுமதிகளை மிகவும் பாதிக்கும். முக்கியமாக, ஜவுளித்துறையின் மையமான திருப்பூர் மிகவும் பாதிப்படையும்.

இதன் பாதிப்பு கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி ஆகும். இந்த வரியால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் பாதிப்படையும்.

நமது தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடியாக மத்திய அரசு நிவாரணம் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா இந்தியாவிற்கு பதிலாக, தனது ஜவுளி இறக்குமதிகளில் வங்கதேசம், வியட்நாம், மெக்சிகோ, CAFTA-DR ஆகிய நாடுகளை நாடியுள்ளது.