“இந்தியா கூட்டணி பீகாரில் பெறும் வெற்றிதான், அடுத்தடுத்த வெற்றிக்கான அடித்தளம்” – மு.க. ஸ்டாலின்

பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்றார். 

தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் பேரணி சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதையடுத்து பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கும் ஸ்டாலின், “ராகுலின் கண்களில் ஒருபோதும் அச்சம் இருந்தது இல்லை. இந்தியா கூட்டணிக்கான அடித்தளம் பாட்னாவில் தான் இடப்பட்டது. பா.ஜ.க.வின் அதிகாரத்தை மக்கள் ஒருநாள் பறிப்பார்கள். தேர்தலுக்கு முன்னதாகவே பீகாரில் உங்களின் வெற்றி உறுதியாகி உள்ளதால் பேரணியை தடுக்கப் பார்க்கின்றனர்.

ராகுல் காந்தி இந்தியாவின் வழக்கறிஞராக இருக்கிறார். மக்கள் சக்தியே உயர்ந்தது என காட்டியிருக்கிறார் தேஜஸ்வி யாதவ். ராகுல், தேஜஸ்வியை வெல்ல முடியாததால் கொல்லைப்புறமாக நுழைய பார்க்கிறது பா.ஜ.க. மக்களவை தேர்தலில் 400 இடங்கள் என கனவு கண்டவர்களை 240-ல் அடக்கியது. இந்தியா கூட்டணி பீகாரில் பெறும் வெற்றி தான் இந்தியா கூட்டணி அடுத்தடுத்து பெறப்போகும் வெற்றிக்கு அடித்தளமாக அமையப்போகிறது.

மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை பீகார் மக்கள் நிரூபிக்க வேண்டும். அரசியலுக்காக பேசுபவர் அல்ல ராகுல், உண்மையின் குரலாக இருப்பவர், அவர் கண்களில் உண்மையும் தைரியமும் உள்ளது. பீகாரில் பா.ஜ.க.வின் துரோக அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும்.” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs