VCK: “தமிழர் என்பதால் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமா?” – என்ன சொல்கிறார் திருமா?

இந்த ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. இக்கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே, குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார்.

கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக குடியரசு துணைத் தலைவர் இல்லாமலேயே மாநிலங்களவை இயங்கிவரும் நிலையில், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணை பா.ஜ.க அறிவித்தது.

சி.பி.ராதாகிருஷ்ணன்
சி.பி.ராதாகிருஷ்ணன்

இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று பாஜக, பாமக அன்புமணி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் மக்களவை உறுப்பினரும் விசிக தலைவருமான திருமாவளவன், “ஏற்கனவே குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கரை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள். அவரை வீட்டுக் காவலில் வைத்து வெளியே விடாமல் வைத்திருக்கின்றனர். இது பாஜக நடத்தும் வலுக்கட்டாயமான தேர்தல்.

தமிழர் ஒருவரை குடியரசு துணைத் தலைவராக ஆக்குவோம் என்று ஒரு சிலர் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

திருமாவளவன்
திருமாவளவன்

இது தமிழ்நாட்டிற்கான தலைவர் பதவி அல்ல, இந்தியாவிற்கான தலைவர் பதவி. எனவே இதில் தமிழர் என்கிற அடையாளத்தை முன்னிறுத்துவதில் எந்தப் பொருளும் இல்லை” என்று பேசியிருக்கிறார் திருமாவளவன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs