‘ரஷ்யா தாக்குதலை நிறுத்தவில்லை என்றால், நாங்கள்…’ – ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு நேற்று முன்தினம் நடந்து முடிந்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் இந்தச் சந்திப்பில் எட்டப்படவில்லை என்றாலும், பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்று இரு நாட்டு அதிபர்களும் கூறியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், நாளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ட்ரம்பை சந்திக்க அமெரிக்கா செல்கிறார்.

 ஜெலன்ஸ்கி - ட்ரம்ப்
ஜெலன்ஸ்கி – ட்ரம்ப்

ஜெலன்ஸ்கி பதிவு

ட்ரம்ப் – புதின் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஜெலன்ஸ்கி பதிவிட்டுள்ளார்.

அதில், “ரஷ்யா தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளைத் மறுத்து வருகிறது. மேலும், அது எப்போது இந்தத் தாக்குதல்களை நிறுத்தலாம் என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை. இது தான் நிலைமையை மோசமடைய வைக்கிறது.

ரஷ்யா தாக்குதலை நிறுத்த விரும்பவில்லை என்றால், அது தனது அண்டை நாடுகளுடன் அமைதியாக வாழ பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆனால், நாங்கள் அனைவரும் அமைதியையும், பாதுகாப்பையும் விரும்புகிறோம். தாக்குதலை நிறுத்துவது தான் போர் நிறுத்தத்திற்கான முதல் அடி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4