தங்கள் பணியை தனியார் மயமாக்கம் செய்யக்கூடாது என 13 நாள் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாக கைதுசெய்தது காவல்துறை. பல்வேறு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கைதுசெய்யப்பட்ட வளர்மதி நிலவுமொழி ஆகியோர் விவகாரத்தில் போலீஸ் எப்படி நடந்துகொண்டது என்பதை விளக்குகிறார் களத்தில் இருந்த சிபிஐ தென்சென்னை மாவட்ட செயலாளர் செல்வா