ட்ரம்ப் சந்திப்பு: ‘நீண்ட நாள்களுக்குப் பிறகு, நம்முடைய…’ – ரஷ்யாவில் புதின்!

அமெரிக்கா அலாஸ்காவில் பேச்சுவார்த்தை முடிந்த சில முடிந்த சில மணிநேரங்களிலேயே ரஷ்யா கிளம்பிவிட்டார் ரஷ்ய அதிபர் புதின்.

ரஷ்யாவில் புதின்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யாவில் பேசியிருக்கிறார் புதின்.

“நீண்ட காலமாக, நாம் இந்த மாதிரியான நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. ஆனால், இப்போது நமது நிலைப்பாட்டை அமைதியாகவும், விளக்கமாகவும் முன்வைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

புதின் - ட்ரம்ப்
புதின் – ட்ரம்ப்

இந்தப் பேச்சுவார்த்தை வெளிப்படையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. என்னைப் பொறுத்தவரை, இந்தப் பேச்சுவார்த்தை தேவையான முடிவுகளை எடுப்பதற்கான வழிகளை வகுத்துள்ளது.

மேலும், இது தகுந்த நேரத்தில் நடந்தது மற்றும் பயனுள்ளதாகவும் இருந்தது” என்று ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்து அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

புதின் நிலைப்பாடு

2022-ம் ஆண்டு ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, புதின் நேரடியாக பெரியளவில் உலக தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இப்படி நடப்பது இதுவே முதல் முறை.

ட்ரம்ப் – புதின் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும், இது அதற்கான ஆரம்பப்புள்ளி என்று நம்பப்படுகிறது.

மேலும், பேச்சுவார்த்தையில், தானும் உக்ரைன் உடனான போரை நிறுத்துவதில் விருப்பமாக உள்ளதாக புதின் தெரிவித்திருக்கிறார்.