Trump-Putin Meet: “உக்ரைன் போரை நிறுத்துவதில் ஆர்வமாக இருக்கிறேன்; ஆனால்…” – புதின் பேசியது என்ன?

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

புதின் - ட்ரம்ப்
புதின் – ட்ரம்ப்

புதின் பேச்சு

அப்போது புதின், “இந்தப் பேச்சுவார்த்தை முழுமையானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. மேலும், இது ஆக்கப்பூர்வமான மற்றும் பரஸ்பர மரியாதையான சூழலில் நடந்துள்ளது.

நானும் ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதில் மிகுந்த ஆர்வத்துடன்தான் இருக்கிறேன். ஆனால், அதில் நியாயமான சில பிரச்னைகள் இருக்கின்றன.

இன்று முடிவுக்கு வந்த பல புரிதல்கள், உக்ரைனுடன் அமைதியை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

இரு நாட்டு அதிபர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில், ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் எட்டப்படவில்லை.

அடுத்த சந்திப்பு எங்கே?

இதேபோல் இன்னொரு சந்திப்பு ஒன்று நடக்க உள்ளது என்று ட்ரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். அதற்கு புதின், அந்தச் சந்திப்பு மாஸ்கோவில் நடக்கும் என்று கூறினார்.

புதின் உடனான பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டாததால், ரஷ்யா உடன் வணிகம் செய்யும் நாடுகளின் மீது அமெரிக்கா விதித்துள்ள வரி குறைக்கப்படாது.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4