ICICI balance: “90% இந்தியர்களின் மாதச் சம்பளம் ரூ.25,000-க்கும் குறைவு” – ஜெய் கோடக் விமர்சனம்

ICICI வங்கி குறைந்தபட்ச வைப்புத்தொகையை 5 மடங்கு உயர்த்திய நடவடிக்கைக்கு பல தரப்பிலிருந்து விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

அந்த வகையில் கோடக் மகிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக்கின் மகனான ஜெய் கோடக், பெரும்பாலான இந்திய மக்களை ஐசிஐசிஐ புறக்கணிப்பதாக விமர்சித்துள்ளார்.

அவரது எக்ஸ் தள பதிவில், “நமது நிதித்துறையை ஒவ்வொரு இந்தியரும் அணுக வேண்டும். 90% இந்தியர்கள் 50,000-க்கு குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றனர்.

ரூ.50000 குறைந்தபட்ச வைப்புத்தொகை என்பது கிட்டத்தட்ட 94% இந்திய மக்களின் மாத வருமானத்தை எப்போதும் வங்கியில் வைத்திருப்பதற்கு சமமானது. இல்லை என்றால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தாக்கம்: சேவை செய்வதற்கு செலவு அதிகமாக இருக்கலாம். டிஜிட்டல் தான் முதல் வழி. வங்கிகள் இதைச் செய்யாவிட்டால் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்யும். வங்கிகள் அனைத்து இந்தியர்களுக்குமானதாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

ICICI bank

35 வயதாகும் ஜெய் கோடக் Kotak811-ன் (டிஜிட்டல் பிரிவு) துணைத் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் பலரும் ஐசிஐசிஐ வங்கியின் முடிவை விமர்சித்துள்ளனர். இதுகுறித்த உங்களது பார்வையை கமண்டில் தெரிவியுங்கள்!