“தமிழிசை சௌந்தரராஜனை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயற்சி”- நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பனி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். பல்வேறுகட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பலனுமில்லை. இதற்கிடையில், அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சு சமூக ஊடகங்களில் விமர்சனங்களை சந்தித்தது. போராட்டம் தொடங்கியதிலிருந்து பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், இப்போராட்டம் தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றில் போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களைக் கலைந்து செல்லும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில், “தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதி எண் 285ன் படி பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னையில் கடந்த 12 நாட்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை இன்று மாலை சந்திக்கவிருந்த தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற அறிவாலய அரசின் அடக்குமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பொதுமக்களின் நலனுக்காகப் போராடும் அரசியல் கட்சி தலைவர்களை தி.மு.க அரசு ஒடுக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை! தூய்மைப் பணியாளர்களின் துயரங்களுக்கு செவிமடுக்காத தி.மு.க அரசுக்கு, அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோர்களைத் தடுப்பதற்கு மட்டும் என்ன உரிமை இருக்கிறது? தமிழகத்தில் தங்களின் உரிமைகளைக் கேட்டு போராடுபவர்களையும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் கைது செய்து, ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் விடியா அரசுக்கு கூடிய விரைவில் முடிவு கட்டப்படும்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk