தாயுமானவன் திட்டம்: “விஜயகாந்த்தின் கனவை நிறைவேற்றியிருக்கிறார் ஸ்டாலின்” – பிரேமலதா நெகிழ்ச்சி

தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் ‘தாயுமானவர் திட்டம்’ இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் பயன்பெறத் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.

MK Stalin
MK Stalin

இந்நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தமிழக அரசின் தாயுமானவன் திட்டம் விஜயகாந்த்திற்குக் கிடைத்த வெற்றி. வீடு தேடி ரேஷன் பொருள் என்ற விஜயகாந்த் கனவின் முதல் கட்டத்தை முதல்வர் நிறைவேற்றி உள்ளார். தாயுமானவன் திட்டத்தைத் தொடங்கிய முதல்வருக்கு நன்றி” என்று பாராட்டிப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs