அடுத்தடுத்து முகூர்த்த நாள்கள், விசேஷ நாள்கள் வருகிறது. தங்கம் விலை என்ன ஆகும் என்கிற பயம் இந்தியர்கள் மத்தியில் இருக்கும்.
இன்னொரு பக்கம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வேறு, வரிகளைப் போட்டு தள்ளிக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், மேலும் ஒரு வரியை அமெரிக்கா தங்கத்தின் மீது விதித்துள்ளதாம்.

இந்த வரி குறித்து நமக்கு தெளிவாக விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.
“கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8), அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைக் கட்டுப்பாடு தங்கத்தின் மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதாவது, அமெரிக்காவில் 1 கிலோ அல்லது ஒரு அவுன்ஸ் தங்கக் கட்டி அளவிற்கு இறக்குமதி ஆகும் தங்கத்தின் மீது இனி 39 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளது.
இதனால், தங்கம் விலையில் மாற்றம் ஏற்படலாம்.
இது யாரைப் பாதிக்கும்?
இந்த வரி விதிப்பு ரீடெயில் வாடிக்கையாளர்களைப் பாதிக்காது.
ஆனால், நகைக்கடை வியாபாரிகள், தொழிற்சாலை வைத்திருப்பவர்களுக்கு இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இதனால், இது தங்கம் விலை உயர்வுக்கு வழிவகுக்கலாம். சந்தையிலும் மாற்றம் ஏற்படலாம்.
ஆனால், இந்த வரி விதிப்பிற்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுடையது ஆகும் என்பதை குறிப்பிடத்தக்கது”.
பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ‘Vikatan Play‘-ல் ‘Opening Bell Show’ தினமும் காலை கேளுங்கள்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…