கொலையாளியுடன் செட்டிங்? – கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

சென்னையை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் ஜெயராமன். இவருக்கு நியூட்டன், பெனிட்டோ என்பவர்கள் நண்பர்களாகியுள்ளனர். இவர்கள் ஜெயராமன் புதிய ஆட்டோ வாங்குவதற்காக, தனியார் நிறுவனத்தில் கடன் பெற்று தந்துள்ளனர். ஆனால் ஜெயராமன் கடனை செலுத்தாமல், நண்பர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக எழுந்த மோதலில், திருநெல்வேலியை சேர்ந்த முருகப்பெருமாள் உதவியுடன் ஜெயராமனை கொலை செய்துள்ளனர்.

பிறகு கோவையில் உள்ள பாலமுருகன் என்பவர் மூலம், ஜெயராமன் உடலை, செட்டிப்பாளையம் அருகே உள்ள கிணற்றில் வீசியுள்ளனர். சுமார் 50 நாள்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பாலமுருகன் மற்றும் முருகப்பெருமாள் சரணடைந்தனர்.

கொலை
கொலை

இதனடிப்படையில் காவல்துறையினர் கிணற்றில் இருந்து ஜெயராமனின் எலும்புகளை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நியூட்டன், பெனிட்டோ, முருகப்பெருமாள், பாலமுருகன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில் திடீர் திருப்பமாக மேலும் சில அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. காவல்துறை விசாரணையில், சூலூர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டராக உள்ள லெனின் அப்பாதுரை இந்த சம்பவத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து லெனின் அப்பாதுரையை சஸ்பெண்ட் செய்து கோவை சரக டிஐஜி சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.

சஸ்பெண்ட்

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “இந்த கொலை சம்பவம் தொடர்பாக லெனின் அப்பாதுரைக்கு ஏற்கெனவே தகவல் தெரிந்துள்ளது. அவர் உண்மையான கொலையாளியை தப்பிக்க வைப்பதற்காக, இந்த வழக்குக்கு சம்மந்தம் இல்லாத ஒருவரை மிரட்டி வாக்குமூலம் கொடுக்க வைத்தது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk