US Tariff On India: ‘இது ஒரு பிளாக்மெயில்; இதற்கு மோடி…’ – ட்ரம்ப் வரி குறித்து ராகுல் காந்தி

ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் இந்தியா மீது 25 சதவிகித வரியை விதித்தது அமெரிக்கா.

இப்போது அந்த 25 சதவிகிதத்தை 50 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ராகுல் காந்தியின் பதிவு

இது குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “ட்ரம்பின் 50 சதவிகித வரி என்பது பொருளாதார பிளாக்மெயில். இது நியாயமற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவைத் திணிக்கும் முயற்சி ஆகும்.

பிரதமர் மோடி இதில் தனது பலவீனத்தைக் காட்டாமல், தேசத்தின் நலனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ட்ரம்பின் இந்த நகர்வுக்கு முக்கிய காரணம், ‘இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தான்’.

ட்ரம்ப்
ட்ரம்ப்

தேச நலன் தான்…

ஆனால், இது குறித்து இந்திய அரசு ஏற்கனவே தெளிவாக விளக்கியது. நேற்று மீண்டும் ‘எங்களுக்கு தேச நலன் தான் முக்கியம்’ என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இருந்தும் ட்ரம்ப் இதை ஒத்துக்கொள்வதாக இல்லை. ட்ரம்பின் இந்த வரிக்கு இந்திய அரசு எப்படி ரியாக்ட் செய்ய உள்ளது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.