Nepoleon: `தனுஷ் – அக்‌ஷயா’ – அமெரிக்க முறைப்படி மகனுக்கு திருமணத்தை நடத்திய நெப்போலியன்

முறுக்கு மீசை, மிடுக்கான தோற்றம் என கிராமத்து கதைகளில் நடித்து நம்மிடையே பரிச்சயமானவர் நடிகர் நெப்போலியன்.

அவருடைய மகன் தனுஷின் சதை சிதைவு நோயின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அவர், தன் மகனின் எதிர்காலத்தை எண்ணி அங்கேயே முழுமையாக இப்போது வசித்து வருகிறார்.

Nepoleon Son Marriage
Nepoleon Son Marriage

திருநெல்வேலியைச் சேர்ந்த அக்‌ஷயா என்பவருடன் நெப்போலியனின் மகன் தனுஷுக்கு கடந்த ஆண்டு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றிருந்தது.

ஜப்பானில் பிரமாண்டமான முறையில் அந்த திருமணம் நடைபெற்றிருந்தது. தனது மகனின் ஆசைக்காக ஜப்பானில் திருமணத்தை நடத்தியிருந்தார் நடிகர் நெப்போலியன்.

இதனைத் தொடர்ந்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்க முறைப்படி தன் மகனுக்கு திருமணத்தை நடத்தியிருக்கிறார்.

அது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நடிகர் நெப்போலியன், “அமெரிக்க முறை திருமணம். அன்பு நண்பர்களே, உலகெங்கும் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களே, வணக்கம்.

உங்களின் அன்போடும் ஆசீர்வாதத்துடனும், அமெரிக்க அரசின் திருமண அனுமதி பெற்று, நேஷ்வில்லில் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்கள், நண்பர்கள் முன்னிலையில், நேஷ்வில் ஶ்ரீ கணேஷ் கோவிலின் மூத்த குருக்களின் வாழ்த்துகளோடு, அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் தலைமையில், அமெரிக்க முறைப்படி, எங்கள் மகன் தனுஷுக்கும் அக்‌ஷயாவிற்கும் திருமணம் இனிதே நடைபெற்றது.

உங்களின் மேலான பார்வைக்கும், உங்களின் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் பல கோடி!” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். இந்த திருமணத்திற்கு திரைத்துறையினர் உள்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR