உ.பி. வெள்ளப் பாதிப்பு: “கங்கை உங்களைச் சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்லும்” – பாஜக அமைச்சர் பேச்சு

உத்தரப்பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத், பாதிக்கப்பட்டவர்களிடம் கங்கை நதி உங்களைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருப்பது எதிர்க்கட்சிகளிடமிருந்து கடும் விமர்சனங்களைத் தூண்டியிருக்கிறது.

கடந்த சில நாள்களாக கங்கை மற்றும் யமுனா நதிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் உத்தரப்பிரதேசத்தின் கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத் - உத்தரப்பிரதேசம்
பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத் – உத்தரப்பிரதேசம்

இந்த நிலையில், அம்மாநில மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத் கடந்த திங்களன்று கான்பூர் தேஹாட் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்றிருக்கிறார்.

அங்குப் பாதிக்கப்பட்டவர்களிடம் சஞ்சய் நிஷாத் பேசும் வீடியோ ஒன்று நேற்றுமுதல் சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் சஞ்சய் நிஷாத், “கங்கை புத்திரர்களின் பாதங்களைச் சுத்தம் செய்ய கங்கை நதி உங்களின் வீடு தேடி வந்திருக்கிறது.

இது நேராக உங்களைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும்” என்று கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களிடம் அமைச்சர் இவ்வாறு கூறியதற்கு சமாஜ்வாதி செய்தித் தொடர்பாளர் சர்வேந்திர பிக்ரம் சிங், “இத்தகைய பேச்சு அமைச்சரின் அக்கறையின்மையைக் காட்டுகிறது.

வெள்ளத்தால் மக்கள் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து கொண்டிருக்கும் நேரத்தில், இதுபோன்று அமைச்சர்கள் கூறுவது, கள யதார்த்தத்திலிருந்து அவர்கள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றது” என்று விமர்சித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk