Trump: “இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்தப் போகிறேன்; ஏனெனில்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

உக்ரைன் மீது மூன்றாண்டுகளுக்கு மேலாக ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இதில், ரஷ்யாவுக்கெதிராகத் தாங்கள் நிற்பதாக அமெரிக்கா தன்னைக் காட்டிக்கொள்கிறது.

இந்தியாவானது, யாருக்கும் ஆதரவில்லை போரை எதிர்கிறோம் என்று நடுநிலையாக இருக்கிறது.

இவ்வாறிருக்க, ரஷ்யாவிடம் இந்தியா வர்த்தகத் தொடர்பில் இருப்பதால், ரஷ்யாவுக்கெதிராக இருக்கும் அமெரிக்க நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சமீபத்தில் இந்தியா மீது 25 சதவிகிதம் வரி விதித்திருந்தார்.

பிரதமர் மோடி - டொனால்ட் ட்ரம்ப்
பிரதமர் மோடி – டொனால்ட் ட்ரம்ப்

அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் பொருளாதாரத்தை இறந்த பொருளாதாரம் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

ட்ரம்ப் இதோடு நிற்காமல், அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தொழிற்சாலைகளை, ஐ.டி நிறுவனங்களை அமைக்க வேண்டாம் என்று மெல்லிய அச்சுறுத்தல் தொனியில் எச்சரிக்கை விடுத்துவருகிறார்.

இந்த நிலையில், இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்தப் போவதாக ட்ரம்ப் தற்போது அறிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் ட்ரம்ப், “இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் எண்ணெய்யை வாங்குவது மட்டுமல்லாமல், வாங்கிய எண்ணெய்யில் பெரும்பகுதியை ஓபன் மார்க்கெட்டில் பெரிய லாபத்துக்கு விற்கிறது.

ரஷ்யாவின் போரால் உக்ரைனில் எத்தனைப் பேர் இறந்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை. இதனால், இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்துவேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk