`இன்னும் வரியை உயர்த்துவேன்’ – இந்தியாவை எச்சரிக்கும் ட்ரம்ப்; காரணம் என்ன?

உலக நாடுகளுக்கு அமெரிக்கா தற்போது விதித்து வரும் பரஸ்பர வரியில் 25 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறோம் என்று அபராதத் தொகையும் விதிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் எச்சரிப்பது என்ன?

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் இந்தியா மீதான வரி குறித்து எச்சரித்துள்ளார். “இந்தியா மிகப்பெரிய அளவில் ரஷ்ய எண்ணெய்களை வாங்குவது மட்டுமல்ல, அவர்கள் வாங்கிய எண்ணெயை பெரிய லாபத்திற்கு சந்தையில் விற்று வருகிறது.

ரஷ்யாவின் போர் இயந்திரத்தால் உக்ரைனில் பல மக்கள் கொல்லப்படுவது குறித்து இந்தியாவிற்கு கவலை இல்லை. இதனால், நான் இந்தியாவின் மீதான வரியை இன்னும் உயர்த்துவேன்” என்று கூறியுள்ளார்.

மோடி - புதின்
மோடி – புதின்

இதை தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது ட்ரம்ப் விதித்திருக்கும் 25 சதவிகித வரியே, மற்ற பிற நாடுகளை விட அதிகமான வரி ஆகும்.

‘இன்னும் வரி அதிகரிப்பேன்’ என்று ட்ரம்ப் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ட்ரம்பின் இந்தக் கூற்றுக்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு