`அமெரிக்கா உடன் வணிகத்தை இந்தியா முறிக்கிறதா?’ – இந்திய வெளியுறவுத் துறை பதில்

ட்ரம்பின் அமெரிக்க அரசு இந்தியா மீது 25 சதவிகித வரியை விதித்துள்ளது. கூடுதலாக, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால், அதற்கும் அபராதத்தை விதித்துள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பதில்!

இதையொட்டி, இந்தியா அமெரிக்க பொருள்களின் மீது அதிக வரி விதிக்க உள்ளது. அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தை முறிக்கப்போகிறது போன்ற ஏகப்பட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வெளியுறவுத் துறை அமைச்சகம், ‘அவை பொய்யான தகவல்கள்’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மத்திய அரசு
மத்திய அரசு

முன்னர்…

இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அவை நல்ல நிலையில் இருப்பதாகவும் முன்னர் கூறப்பட்டுக்கொண்டிருந்தது.

அதுவும் இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பே கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்தியா மீது 25 சதவிகித வரி விதித்தது பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது.

இது மற்ற சில நாடுகளை விட மிகவும் அதிகமாகும்.

இந்த வரியைக் குறைக்க இந்தியா அமெரிக்கா உடன் எதிர்காலத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளலாம்.

ஆனால், அதற்குள் பொய்யான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கிவிட்டது.